IPL 2025: ஐபிஎல்லில் 'இது' தேவையில்லாத ஆணி! உண்மையை போட்டுடைத்த தோனி!
சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்லில் கடைபிடிக்கப்படும் இம்பேக்ட் பிளேயேர் விதி குறித்து விரிவாக பேசியுள்ளார்.
சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்லில் கடைபிடிக்கப்படும் இம்பேக்ட் பிளேயேர் விதி குறித்து விரிவாக பேசியுள்ளார்.
IPL: MS Dhoni talks about Impact Player Rule: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது போட்டியில் பலம்வாய்ந்த மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் சொந்த மண்ணில் வரும் 28ம் தேதி ஆர்சிபியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாருக்கு தோனி அளித்த பேட்டியில் கூறுகையில், ''இம்பேக்ட் விதி செயல்படுத்தப்பட்டபோது, அந்த நேரத்தில் அது உண்மையில் தேவையில்லை என்று உணர்ந்தேன். ஆனால் ஒரு வகையில் இது எனக்கு உதவுகிறது. ஆனால் அதே நேரத்தில் நான் இன்னும் விக்கெட் கீப்பிங் பணியைத் தான் செய்கிறேன். அதனால் நான் ஒரு இம்பேக்ட் பிளேயர் அல்ல'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தோனி, ''இம்பேக்ட் பிளேயர் விதி அதிக ஸ்கோரிங்களுக்கு வழிவகுப்பதாக பலரும் கூறுகிறார்கள். நிலைமைகள் மற்றும் வீரர்களின் ஆறுதல் நிலை காரணமாக இது அதிகம் என்று நான் நம்புகிறேன். அடிக்கப்படும் ரன்களின் எண்ணிக்கை ஒரு கூடுதல் பேட்ஸ்மேனால் மட்டுமல்ல. இது மனநிலையைப் பற்றியது, அணிகள் இப்போது ஒரு கூடுதல் பேட்டர் ஆறுதலைக் கொண்டுள்ளன, எனவே அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள்'' என்றார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ கொடுக்கும் இன்ப அதிர்ச்சி! ரோகித், கோலிக்கு வரப்போகும் ஷாக்?
இம்பேக்ட் பிளேயர் விதி என்றால் என்ன?
ஐபிஎல் போட்டிகளில்'இம்பாக்ட் பிளேயர்' என்ற விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிரிக்கெட் அணியில் பிளேயிங் லெவன் எனப்படும் 11 பேர் கொண்ட வீரர்கள் விளையாடுவார்கள். இது தான் விதி. ஆனால் இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அந்தந்த அணிகள் அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாராவது ஒருவரை தேவைக்கு ஏற்றார்போல் அணியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது இந்த 5 வீரர்களில் ஒருவரை ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்ஸ்மேனாகவோ அல்லது பேட்ஸ்மேனுக்கு பதிலாக பவுலராக பயன்படுத்திக் கொள்ளலாம். இம்பாக்ட் பிளேயர் விதியால் ஐபிஎல் அணிகளுக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு பவுலர் கிடைப்பார்கள். கடந்த 2023ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
IPL: மீண்டும் வேலையை காட்டும் சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பண்ட், லக்னோ வீரர்கள் அதிருப்தி?