ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவு! 'ஸ்டார்' வீரர் விலகல்! அட! மாற்று வீரர் இவரா?

Published : May 08, 2025, 07:41 AM IST

ஆர்சிபி அணியில் தேவ்தத் படிக்கல்லுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். தேவ்தத் படிக்கல் விலகல் ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.  

PREV
14
ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவு! 'ஸ்டார்' வீரர் விலகல்! அட! மாற்று வீரர் இவரா?
Mayank Agarwal Replaces Devdutt Padikkal RCB

Mayank Agarwal Replaces Devdutt Padikkal RCB: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தாத ஆர்சிபி அணி இந்த சீசனில் வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றி, 3ல் தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும். இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் அதிரடி வீரர் தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

24
ஆர்சிபி அணியில் மயங்க் அகர்வால்

காயம் காரணமாக விலகிய தேவ்தத் படிக்கல்லுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 போட்டிகளில் 247 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கும் தேவ்தத் படிக்கலின் காயம் ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவாகும். 10 போட்டிகளில் 247 ரன்கள் எடுத்த படிக்கல் வலது தொடை தசைநார் பகுதியில் காயம் ஏற்பட்டு சீசனில் இருந்து விலகினார். கடந்த சீசனில் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு மயங்க் அகர்வால் ஐபிஎல் 2025 ஏலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. கர்நாடக வீரரான அவர் இதுவரை 127 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியு 661 ரன்கள் எடுத்துள்ளார்.

34
தேவ்தத் படிக்கல் விலகல் பெரும் பின்னடைவு

"ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகளில் தேவ்தத் படிக்கலுக்கு பதிலாக மயங்க் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சீசனில் ஆர்சிபிக்காக 10 போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்களுடன் 247 ரன்கள் எடுத்த தேவ்தத் படிக்கலுக்கு வலது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. மயங்க் அகர்வால் இதுவரை 127 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார், 2,661 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 1 ஐபிஎல் சதம் மற்றும் 13 அரைசதங்களை வைத்துள்ளார். அவர் 1 கோடி ரூபாய்க்கு ஆர்சிபியில் இணைகிறார்" என்று ஐபிஎல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

44
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் வீரர்

இதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐபிஎல்லில் இருந்து விலகிய அதிரடி வீரர் ஹாரி ப்ரூக்குக்கு பதிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த செடிகுல்லா அடல் என்ற வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது.  ஹாரி ப்ரூக் ஐபிஎல் தொடக்கத்திலேயே ஐபிஎல்லில் இருந்து விலகிய நிலையில், இப்போது தான் அவருக்கு பதிலாக ஒரு வீரரை டெல்லி சேர்த்துள்ளது. இடது கை வீரரான செடிகுல்லா அடல் 2023 இல் டி20 அறிமுகத்தை மேற்கொண்டார். 49 போட்டிகளில் 1507 ரன்கள் எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இப்போது அடிப்படை விலையான ரூ.1.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சேர்ந்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories