தமிழக நாயகன் மாரியப்பன் தங்கவேலு: வலியும், கஷ்டமும் நிறைந்த ஒரு சாம்பியனின் பயணம்!

First Published | Sep 4, 2024, 1:15 PM IST

சேலத்தைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு, தனது ஐந்து வயதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் பாதிக்கப்பட்ட போதிலும், தடைகளைத் தாண்டி பாராலிம்பிக் தங்கம் வென்ற சாதனையாளர் ஆவார். இந்தியாவின் பெருமைமிகு விளையாட்டு வீரர்களில் ஒருவரான அவர், தனது விடாமுயற்சியால் உலகை வியக்க வைத்துள்ளார்.

Mariyappan Thangavelu

சேலத்தைச் சேர்ந்தவர் உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு. கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். இவர், 1995 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி சேலத்தில் பிறந்தார். 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் T-42 பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Mariyappan Thangavelu

சேலத்தில் பிறந்த மாரியப்பன் தங்கவேலு, தனது 5 வயதில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அவரது வலது காலில் பாதிப்பு ஏற்பட்டது. எனினும், அதனையெல்லாம் பொருட்படுத்தால் தனது திறமை அறிந்து இன்று சாதனை படைத்து வருகிறார். விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேசனில் பட்டம் பெற்றார்.

Tap to resize

Mariyappan Thangavelu Records

படிக்கும் பருவத்தில் உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு, தடகளத்தில் கவனம் செலுத்தினார். பயிற்சியாளர் சத்யநாராயணாவின் உதவியால் மாரியப்பனின் வாழ்க்கை மாறியது. இந்திய தேசிய பாரா-தடகள சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் விளையாடுவதைக் கண்ட சத்யநாராயணா, அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மேலும் பயிற்சி கொடுத்தார்.

Mariyappan Thangavelu

கடந்த 2016 ஆம் ஆண்டு துனிசியாவின் துனிஸில் நடந்த கிராண்ட் பிரிக்ஸில் தங்கவேலு 1.78 மீ உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்திற்குத் தகுதி பெற்றார். ரியோ பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் T-42 பிரிவில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். அதோடு மட்டுமின்றி, 2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் உயரம் தாண்டுதல் டி-63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mariyappan Thangavelu

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டில் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

Mariyappan Thangavelu

இதுவரையில் மாரியப்பன் தங்கவேலு 2 தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பாரிஸில் நடைபெற்று 2024 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு T63 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Latest Videos

click me!