ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். செல்வந்தர்கள், பக்தர்கள் வழங்கும் காணிக்கையால் உலகின் பணக்கார கோயிலாக திருப்பதி விளங்கி வருகிறது.
24
திருப்பதி கோயிலில் சஞ்சீவ் கோயங்கா தரிசனம்
இந்நிலையில், பிரபல தொழில் அதிபரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளருமான சஞ்சீவ் கோயங்கா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் திருப்பதி கோயிலின் மூலவரின் கைகளுக்கு அணிவிக்க வைரங்கள் மற்றும் ரத்தினங்கள் பதித்த 5.267 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ரூ.3.63 கோடி மதிப்பிலான தங்க கை கவசங்களை நன்கொடையாக வழங்கினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர்
முன்னதாக, சஞ்சீவ் கோயங்கா மற்றும் அவரது குடும்பத்தினரை திருப்பதி கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். தரிசனம் முடிந்ததும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதங்களை வழங்கினார்கள். திருப்பதி கோயிலில் சஞ்சீவ் கோயங்கா தரிசனம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொழில் அதிபர் சஞ்சீவ் கோயங்கா ஐபிஎல் அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளராக உள்ளார்.
34
தொடர் தோல்வியை சந்தித்த லக்னோ அணி
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமே. லக்னோ அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், சஞ்சய் கோயங்கா ஏழுமலையானை தரிசித்த பிறகாவது அந்த அணி வெற்றி பெறுமா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சஞ்சீவ் கோயங்கா அதிகம் உணர்ச்சிவசப்படும் நபர் ஆவார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றால் கேப்டன் ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களை பாரட்டித்தள்ளி வரும் அணி தோற்று விட்டால் வீரர்கள் மீது கோபத்தை காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த 2024 ஐபிஎல் சீசனில் சஞ்சீவ் கோயங்கா பொது வெளியில் திட்டியதால் ல்க்னோ கேப்டன் கே.எல்.ராகுல் அந்த அணியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.