பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், அன்ரிச் நோர்க்யா, ஹர்சித் ராணா ஆகியோர் உள்ளனர். ஆர்சிபி அணியை பொறுத்தவரை இளம் வீரர் ரஜத் படிதார் தலைமையில் களம் காண்கிறது. இங்கும் பில் சால்ட், லியோம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஜோஸ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், குர்ணால் பாண்ட்யா ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் 34 முறை மோதியுள்ளன. KKR அணி 20 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் RCB அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடந்த 5 போட்டிகளில் கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
சிஎஸ்கேவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள்!