சிஎஸ்கேவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கேவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கேவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
IPL top 5 players who took most runs and most wickets in CSK உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 தொடர் இன்று (மார்ச் 22ம் தேதி) முதல் கோலாகலமாக தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என ஒவ்வொரு அணிகளும் ஆயத்தமாக உள்ளன. ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறந்த அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
5 முறை ஐபில் கோப்பையை கையில் ஏந்தியுள்ள சிஎஸ்கே, இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்ப ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கி வைத்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கேவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார்? அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிஎஸ்கேவில் அதிக ரன்கள் எடுத்த வீரராக சுரேஷ் ரெய்னா உள்ளார். சிஎஸ்கேவுக்காக 176 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 4,687 ரன்கள் குவித்துள்ளார். 2வது இடத்தில் உள்ள மகேந்திர சிங் தோனி 233 போட்டிகளில் விளையாடி 4,644 ரன்கள் அடித்துள்ளார். 3வது இடத்தில் உள்ள டாப் டூ பிளசிஸ் 92 போட்டிகளில் விளையாடி 2,721 ரன்கள் குவித்துள்ளார். 4வது இடத்தில் உள்ள ருத்ராஜ் கெய்க்வாட் 65 போட்டிகளில் 2,380 ரன்கள் சேர்த்துள்ளார். 5வது இடம் பிடித்துள்ள அம்பத்தி ராயுடு 90 போட்டிகளில் 1,932 ரன்கள் அடித்துள்ளார்.
CSK vs MI போட்டியில் தெறிக்கவிட போகும் அனிருத் இசை; தோனியே கண்டு ரசிக்க போகிறார்!
சிஎஸ்கேவின் ஒரு வீரரரின் தனிப்பட்ட அதிகப்பட்ச ஸ்கோராக முரளி விஜய் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்ததே தனிப்பட்ட அதிகப்பட்ச ஸ்கோராக உள்ளது. சிஎஸ்கேவில் அதிகப்பட்ச ஸ்டிரைக் ரேட் ஷிவம் துபேவிடம் உள்ளது. இவர் 678 பந்துகளில் 161.65 ஸ்டிரைக் ரேட்டில் 1,096 ரன்கள் அடித்துள்ளார். இதேபோல் சிஎஸ்கேவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ முதல் இடத்தில் இருக்கிறார்.
116 போட்டிகளில் விளையாடியுள்ள டுவைன் பிராவோ 140 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2வது இடத்தில் உள்ள ரவீந்திர ஜடேஜா 171 போட்டிகளில் 133 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 3வது இடம் பிடித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 97 போட்டிகளில் 90 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 4வது இடத்தில் உள்ள அல்பி மோர்கல் 78 போட்டிகளில் 76 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். 5வது இடத்தில் உள்ள தீபக் சாஹர் 76 போட்டிகளில் 75 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
KKR vs RCB: ஐபிஎல் முதல் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு! என்ன காரணம்?