சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் வெல்லும் என கணித்து விமர்சனத்துக்குள்ளான ஐஐடி பாபா, ஐபிஎல் 2025ல் கோப்பையை வெல்லும் அணியை கணித்துள்ளார். இதனால் அந்த அணி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
IIT Baba IPL Prediction: இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ளது. தினமும் விறுவிறுப்பாக போட்டிகள் நடந்து வரும் நிலையில், தங்களுக்கு பிடித்தமான அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் ஐஐடி பாபாவாக அறியப்பட்ட அபய் சிங் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார். ஐஐடியை விட்டு சன்யாசம் சென்ற அபய் சிங்கின் கணிப்பால் ஆர்சிபி அணி வீரர்கள் கலகக்த்தில் உள்ளனர். அது ஏன்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
25
IIT BABA, IPL, Cricket
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் பிரபலம் அடைந்த அபய் சிங் எனப்படும் ஐஐடி பாபா அண்மையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என கணித்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் படுதோல்வி அடைந்தது. மேலும் பாகிஸ்தான் தொடரில் எந்த ஒரு வெற்றியையும் பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. ஐஐடி பாபாவின் தவறான கணிப்புக்கு ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்தனர்.
35
IIT BABA, RCB, CSK
இந்நிலையில் தான் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என ஐஐடி பாபா கூறியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும். ஆர்சிபி, சிஎஸ்கே 2025 போட்டியில் நன்றாக விளையாடி இறுதிப் போட்டிக்கு வரும். இந்த இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். கடைசியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என ஐஐடி பாபா கணித்துள்ளார்.
ஐஐடி பாபா ஆர்சிபி கோப்பையை வெல்லும் என கணித்ததும் ஆர்சிபி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை விட பயம் அதிகமாகிவிட்டது. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என சொல்லி கடைசியில் பாகிஸ்தான் ஒரு மேட்ச் கூட ஜெயிக்கவில்லை. இப்போது ஆர்சிபி ஜெயிக்கும் என்று ஐஐடி பாபா கணித்துள்ளதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி மாதிரி கதை மாறிவிடுமோ என்று ஆர்சிபி ரசிகர்கள் பயப்படுகிறார்கள்.
55
CSK vs RCB, Sports News In Tamil
ஐஐடி பாபா கணித்தபடி ஆர்சிபி இந்த முறை நல்ல தொடக்கம் பெற்றுள்ளது. கடந்த சீசன்களை விட இந்த முறை நன்றாக தொடக்கம் கண்டுள்ளது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சென்னை இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோற்றுவிட்டது. ஆகையால் ஐஐடி பாபா கணிப்பு உண்மையாகிவிடும் என்கிறார்கள். ஆர்சிபி இத்தனை ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கிறது. இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என்றும், இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்றும் ஆர்சிபி ரசிகர்கள் விரும்புகிறார்கள்.