Rohit Sharma: சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் சர்மா ஓய்வு? புதிய கேப்டன் இவரா?

Published : Mar 07, 2025, 12:02 PM IST

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற உள்ளதாகவும் அவருக்கு பதிலாக இளம் வீரரை புதிய கேப்டனாக நியமிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

PREV
14
Rohit Sharma: சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் சர்மா ஓய்வு? புதிய கேப்டன் இவரா?

Rohit Sharma Replacement: Who Will Lead India Next?  ரோஹித் சர்மா ஓய்வுபெற்றுவிட்டால், அவருக்கு மாற்றாக எந்த வீரர் ரெகுலராக இடம் பிடிப்பார் என்பது குறித்து, பிசிசிஐ மீட்டிங்கில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் படுமோசமாக விளையாடி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. அத்துடன் அவரது கேப்டன்சியும் சுத்தமாக சரியில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கடைசி சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.
 

24
ரோகித் சர்மா ஓய்வு?

இதனால் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவிய நிலையில், அதை அவர் மறுத்தார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தோல்வி குறித்து ரோஹித் சர்மாவுடன் ஆலோசனை நடத்திய பிசிசிஐ, அணியில் அவரது எதிர்காலம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

இந்த தொடரில் இந்திய அணியில் புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கேப்டன் ரேஸில் உள்ளனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஓடிஐகளுக்கு புதிய கேப்டன் நியக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சோன‌முத்தா இதுவும் போச்சா! பாகிஸ்தானை வச்சி செய்யும் நெட்டிசன்கள்! என்ன விஷயம்?

34
அஜித் அகார்கர்- பிசிசிஐ

ரோஹித் சர்மாவுக்கு விரைவில் 38 வயதாகும் நிலையில், அவரை கேப்டன்சியில் இருந்து மட்டுமின்றி அவரை அணியில் இருந்து ஓய்வு பெற செய்யவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரோஹித் சர்மா கேப்டன்சி இடத்தில் இளம் வீரர் ஒருவரை நிரந்தர கேப்டனாக நியமிக்க உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலகி விடுவார் என பிசிசிஐ எதிர்பார்க்கிறது. அப்படி அவர் கேப்டன்சியில் இருந்து விலகவில்லை என்றால் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றாலும் ரோகித் சர்மா இனிமேல் இந்திய அணியில் இடம்பெறுவது கடினம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
சுப்மன் கில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, 2027 ஓடிஐ உலககோப்பைக்கு முன்னதாக புதிய கேப்டன் கீழ் புதிய அணியை கட்டமைக்க பிசிசிஐ உறுதியாக உள்ளது. ஆகையால் ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களை கழட்டி விட்டு இளம் வீரர்களை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ரோகித் சர்மா இடத்தில் இளம் வீரர் சுப்மன் கில் ஓடிஐ, டெஸ்ட் அணியில் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. 

Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை: ஐசிசியை விமர்சித்த டேவிட் மில்லர்!

Read more Photos on
click me!

Recommended Stories