Neeraj Chopra Net Worth
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 87.58மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இந்த தொடரில் தான் இந்தியா அதிகமாக 7 பதக்கங்களை கைப்பற்றியது. Neeraj Chopra Panipat House Tour
Neeraj Chopra Net Worth
Neeraj Chopra Panipat House Tour தற்போது பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் மட்டுமே கைப்பற்றினார். ஒலிம்பிக் தொடரில் இதுவே நீரஜ் சோப்ராவின் சிறந்த எறிதல் தூரமாகும். இதுவரையில் 90மீ தூரத்தை நீரஜ் சோப்ரா அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Neeraj Chopra Net Worth
ஆனால், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்று அந்த நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து நாடு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு, ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமிற்கு அவரது மாமனார் எருமை மாடு ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
Neeraj Chopra House
பொதுவாகவே நீரஜ் சோப்ரா யார் என்று கேட்டால் அவர் தடகள் வீரர். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்தவர் என்று எல்லோரும் சொல்லிவிடுவார்கள். ஆனால், அவரது வீடு, கார், பைக், நிகர சொத்து மதிப்பு பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. அதைப் பற்றி தான் இந்தப் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
Neeraj Chopra Brand Endoresements
ஹரியானா மாநிலம் காந்த்ராவில் பானிபட்டில் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிறந்துள்ளார். தற்போது 26 வயதாகும் நீரஜ் சோப்ரா பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். Neeraj Chopra Panipat House Tour
Neeraj Chopra Medals
இதுவரையில் ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், தென் ஆசிய விளையாட்டு, ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய விளையாட்டுகளில் மொத்தமாக 9 தங்கப் பதக்கம் 4 வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 13 பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். Neeraj Chopra Panipat House Tour
Neeraj Chopra
கடந்த 2016, இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு ராஜ்புதானா ரைபிள்ஸில் நைப் சுபேதார் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். இது தவிர பரம் விசிட்ட சேவா விருது வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று விசிட்ட சேவா பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
Neeraj Chopra Panipat House
நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.37 கோடி ஆகும். இவரது மாத வருமானம் ரூ.30 லட்சம் ஆகும். நீரஜ் சோப்ராவின் வருமானம் சர்வதேச போட்டிகள், ஒப்பந்த்ம், இந்திய இராணுவத்தில் ஜூனியர் கமிஷனர் ஆபிஷர் பதவி உள்பட பல்வேறு ஆதராங்களிலிருந்து பெறப்படுகிறது. மாதம் ரூ.30 லட்சம் வருமானம் பெறுவதன் மூலமாக வருடத்திற்கு ரூ.4 கோடி வரையில் வருவாய் ஈட்டுகிறார். Neeraj Chopra Panipat House Tour
Neeraj Chopra House
முக்கிய அம்சமாக அவரது 3 அடுக்குமாடி சொகுசு பங்களா உள்ளது. ஹரியானா மாநிலம் கந்த்ராவில் உள்ள பானிபட் அருகில் 3 அடுக்குமாடி சொகுசு பங்களா ஒன்று உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் உள்பட நீரஜ் சோப்ராவின் சாதனைகளை அழகாக காட்டும் வகையில் இந்த சொகுசு வீடு உள்ளது.
Neeraj Chopra Net Worth
இந்த வீட்டின் வெளிப்புறத்தில் வசுதைவ குடும்பகம் என்று எழுதப்பட்டுள்ளது. அப்படியே கேட்டை திறந்து உள்ளே சென்றால் கார் மற்றும் பைக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், டிராக்டர் வண்டியும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹார்டனின் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு தோட்டத்தில் உள்ள சின்ன சின்ன கட்டிடங்களில் சுவாமி படங்கள் ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது.
Neeraj Chopra Car Collections
நீரஜ் சோப்ராவின் கார் கலெக்ஷன்ஸ்:
விளையாட்டு வீரர்களுக்கு கார் மற்றும் பைக் மீது அதிக நாட்டம் இருக்கும். அதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா. நீரஜ் சோப்ரா ரேஞ்ச் ஓவர், போர்டு, டொயோட்டா என்று பல வகையான கார்களை வைத்திருக்கிறார். Neeraj Chopra Panipat House Tour
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் – ரூ.2 கோடி
ஃபோடு முஸ்டாக் ஜிடி – ரூ.93.52 லட்சம்
டொயோட்டா ஃபார்ச்சூனர் – ரூ.33.43 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் வரையில்
Neeraj Chopra House Tour
மஹிந்திரா தார், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களையும் வைத்திருக்கிறார். இதில் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரானது மஹிந்திரா சேர்மன் ஆனந்த் மஹிந்திரா கொடுத்த பரிசு. Neeraj Chopra Panipat House Tour
உயர்தர பைக்குகள்:
ஹார்ட்லி டேவிட்சன் 1200 ரோட்ஸ்டர் – ரூ.11 லட்சம்
பஜாஜ் பல்சர் 220எஃப் – ரூ.1 லட்சம்
Neeraj Chopra Net Worth
பிராண்ட் ஒப்பந்தங்கள்:
நீரஜ் சோப்ரா பல முன்னணி பிராண்டு நிறுவனங்களான Nike, Omega, Gatorade, Tata AIA Life Insurance மற்றும் CRED ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அவரது இந்த ஒப்பந்தங்கள் வருமானத்தில் பெரும் பங்களிப்பை அளிக்கின்றன. Neeraj Chopra Panipat House Tour