Gold Medal Price in India
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூலை 26 ஆம் தேதி முதல் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் முடியும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரையில் 5 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
Olympic Gold Medal Price
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா தடகளம், ஜூடோ, வில்வித்தை, ஹாக்கி, டென்னிஸ், பேட்மிண்டன், ரோவிங், பளூதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், படகுப் போட்டி, கோல்ஃப் என்று மொத்தமாக 16 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றது.
Price of Gold Medal in Olympics 2024
பாரீஸ் ஒலிம்பிக் 2024 விளையாட்டு போட்டி நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.61,500 கோடி வரையில் செலவிட்டுள்ளனர். இதில் ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 75 லட்சம் ஆகும். இதே போன்று வெள்ளிப் பதக்கத்தின் விலை ரூ.50 லட்சம், வெண்கலப் பதக்கத்தின் விலை ரூ.30 லட்சம் ஆகும்.
Paris Olympic Games 2024
5084 பதக்கங்கள்:
இந்த ஒலிம்பிக் தொடருக்கு 5084 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பதக்கங்கள் எல்லாவற்றையும் பாரீஸை தளமாக கொண்டு செயல்படும் சௌமெட் என்ற ஆடம்பர நகை நிறுவனம் வடிவமைத்துள்ளது. பதக்கத்தின் பின்புறத்தில் கிரேக்க தெய்வமான நைக் இடம் பெற்றுள்ளது.
Olympic Gold Medal Price in Indian Rupees
பதக்கத்தின் எடை:
ஒவ்வொரு பதக்கமும் 455–529 கிராம் எடையும், 85 மிமீ (3.3 அங்குலம்) விட்டமும், 9.2 மிமீ (0.36 அங்குலம்) தடிமனும் கொண்டுள்ளது. தங்கப் பதக்கம் 98.8 சதவிகிதம் வெள்ளி மற்றும் 1.13 சதவிகிதம் தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெண்கலப் பதக்கமானது தாமிரம், துத்தநாகம், தகரம் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.