Vinesh Phogat
ஹரியானாவைச் சேர்ந்தவர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மல்யுத்த போட்டிகளில் இடம் பெற்று விளையாடி பல பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுகளில் இடம் பெற்று விளையாடி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கைப்பற்றியிருக்கிறார்.
Vinesh Phogat Retirement
இது தவிர, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்று விளையாடி காலிறுதிப் போட்டியுடன் வெளியேறியுள்ளார். இந்த தொடரில் அவர் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இந்த தொடரில் அவர் காலிறுதிப் போட்டியுடன் வெளியேறியிருக்கிறார்.
Wrestling
இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 50 கிலோ எடைப்பிரிவில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இப்படி 3 ஒலிம்பிக் தொடர்களிலும் 3 வெவ்வேறு எடைப்பிரிவுகளில் இடம் பெற்று விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்துள்ளார்.
Paris 2024 Olympics
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் போட்டியிட்ட 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் வினேஷ் போகத்தும் ஒருவர். இவர், மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவிற்கு விளையாடினார்.
Paris Olympics 2024
எலிமினேஷன் என்று சொல்லப்படும் 16ஆவது சுற்று போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் வினேஷ் போகத் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு சென்றார்.
Vinesh Phogat
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு புள்ளி கூட இழக்காமல் யுய் சுசாகி தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மல்யுத்தம் போட்டியில் விளையாடி வரும் சுசாகி இதுவரையில் 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
Womens 50 Kg Wrestling
இதே போன்று காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்ஸானா வாசிலிவ்னா லிவாச்சை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் வினேஷ் போகத் சிறப்பாக விளையாடி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் கியூபா நாட்டைச் சேர்ந்த யூஸ்னிலிஸ் குஸ்மான்னை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Vinesh Phogat Wrestling Retirement
ஆனால், இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடையை விட 100 கிராம் கூடுதலாக இருந்த நிலையில், மகளிர் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் உடல் எடையை குறைக்க முடி வெட்டுதல், ரத்தத்தை வெளியேற்றுதல், சைக்கிளிங், ஜாக்கிங், ஸ்கிப்பிங் என்று பல வழிகளிலும் முயற்சி செய்துள்ளனர். எந்த பலனும் இல்லை.
Vinesh Phogat Retirement
கடைசியில் தகுதி நீக்கமே ஜெயித்தது. இந்த நிலையில் தான் இன்று அதிகாலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். எனது துணிச்சல் உடைந்துவிட்டது. இப்போது என்னிடம் வலிமை இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்திற்கு குட் பை என்று பதிவிட்டுள்ளார்.
Paris Olympics 2024
இதுவரையில் 3 முறை ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்ற வினேஷ் போகத் ஒரு பதக்கமும் இல்லாமல் வெளியேறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தங்கம் அல்லது வெள்ளி கைப்பற்ற வாய்ப்புகள் இருந்த நிலையிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது அவரை ஓய்வு முடிவு எடுக்க வைத்துள்ளது.