துபாயில் களம் புகுந்த ஜஸ்புரித் பும்ரா! இந்திய வீரர்கள் குஷி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published : Feb 23, 2025, 03:33 PM IST

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாயில் விளையாடும் நிலையில், ஜஸ்பிரித் பும்ரா துபாய் சென்று இந்திய வீரர்களை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

PREV
14
துபாயில் களம் புகுந்த ஜஸ்புரித் பும்ரா! இந்திய வீரர்கள் குஷி! ரசிகர்கள் கொண்டாட்டம்!
துபாயில் களம் புகுந்த ஜஸ்புரித் பும்ரா! இந்திய வீரர்கள் குஷி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார. அதன்படி இந்தியா முதலில் பவுலிங் செய்து வருகிறது. 

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் துபாய் சர்வதேச மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது உலகின் நம்பர் பவுலரான ஜஸ்பிரித் பும்ரா திடீரென அந்த மைதானத்துக்கு சென்றார். அவரை பார்த்ததும் இந்திய வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் அனைரையும் ஜஸ்பிரித் பும்ரா சந்தித்து பேசினார்.

24
ஜஸ்பிரித் பும்ரா

விராட் கோலியை கட்டித்தழுவிய பும்ரா சில நிமிடங்கள் அவருடன் பேசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதுகில் காயம் அடைந்த  ஜஸ்பிரித் பும்ராவால் துரதிருஷ்டவசமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் துபாய் வந்து இந்திய வீரர்களை சந்தித்து பேசியுள்ளது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

IND vs PAK: இந்தியா முதலில் பவுலிங்! அணியில் என்னென்ன மாற்றம்? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

34
இந்திய வீரர்களை சந்தித்த ஜஸ்பிரித் பும்ரா

முன்னதாக, ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி ஆண்கள் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், ஐசிசி ஆண்கள் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், ஐசிசி ஆண்கள் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்ற விரர், ஐசிசி ஆண்கள் ஆண்டின் சிறந்த டி20 அணியில் இடம்பெற்ற வீரர் என ஐசிசி அறிவித்த 4 விருதுகளையும் துபாயில் பெற்றுக் கொண்டார். இந்த விருதுகளுடன் அவர் துபாய் மைதானத்தில் கொடுத்த போஸ் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

44
சாம்பியன்ஸ் டிராபி 2025

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். ''ஜஸ்பிரித் பும்ரா ஒரு சாம்பியன் வீரர். அவர் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இல்லாதது இந்திய அணிக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஜஸ்பிரித் பம்ரா விரைவில் குணமடைந்து நாட்டுக்காக விளையாட வேண்டும்'' என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் கேப்டனாகும் சுப்மன் கில்! அவரே சொன்ன தகவல்!

Read more Photos on
click me!

Recommended Stories