
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டி நாளை நடக்கிறது. வருண் சக்கரவர்த்தி அணியில் அப்படியே தொடர உள்ளார். பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மார்ச் 4 (செவ்வாய்க்கிழமை) மோதுகின்றன. 2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மார்ச் 5 (புதன்கிழமை) விளையாடுகின்றன.
இந்திய அணியை பொறுத்தவரை பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து என மூன்று அணிகளையும் பந்தாடி விட்டு கெத்தாக அரையிறுதிக்குள் வந்துள்ளது. சாம்பியன்ஸ் தொடரில் இந்தியா மட்டும் தான் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 2 போட்டி மழையால் தடைபட்டது. தெனனாப்பிரிக்காவுக்கு ஒரு போட்டி மழையால் தடைபட்டது. நியூசிலாந்து ஒரு போட்டியில் தோல்வி அடைந்து விட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி பைனலில் இந்திய அணியை தேர்வு செய்வது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இடம்பிடித்த வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவர் செமி பைனலில் விளையாடுவது உறுதியாகி விட்டது.
இதனால் இந்திய அணி 4 ஸ்பின்னர்கள், ஒரு பாஸ்ட் பவுலர், ஒரு மீடியம் பாஸ்ட் பவுலருடன் விளையாடுமா? அல்லது 3 ஸ்பின்னர்கள், 2 பாஸ்ட் பவுலர், ஒரு மீடியம் பாஸ்ட் பவுலருடன் விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன் அவமானப்பட்ட 'அதே' இடத்தில் ஆட்டநாயகன்! யார் இந்த வருண் சக்கரவர்த்தி?
ஆனால் ஆஸ்திரேலிய அணி ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறும் என்பதால் இந்திய அணி 4 ஸ்பின்னர்கள், ஒரு பாஸ்ட் பவுலர், ஒரு மீடியம் பாஸ்ட் பவுலருடன் விளையாடும் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீல் யாதவ் என 4 ஸ்பின்னர்கள் விளையாடுகின்றனர். பாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி விளையாட மாட்டார் என தகவல்கள் கூறுகின்றன.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசி வீரர் எறிந்த த்ரோ எதிர்பாராதவிதமாக ஷமியின் முதுகில் தாக்கியது. பந்து பலமாக தாக்கியதால் அவர் வலியால் துடித்தார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது சந்தேகமாக உள்ளது. ஷமி விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்சித் ராணா விளையாடுவார்கள்.
ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி பைனலில் 2வது பாஸ்ட் பவுலருடன் விளையாட இந்திய அணி விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
ரோகித் சர்மா, சுப்மன் கில்லும் வழக்கம்போல் ஒப்பனிங்கில் களமிறங்க உள்ளனர். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் விளையாட உள்ளனர். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா பின்வரிசையில் பலம் சேர்கக் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி பைனலில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், மற்றும் முகமது ஷமி அல்லது அர்ஷ்தீப் சிங்.
இவர் மனுசனா இல்ல ஸ்பைடர் மேனா! ஃபிலிப்ஸின் நம்பமுடியாத கேட்ச்! விக்கித்துப் போன விராட் கோலி!