இந்தியப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத இலக்குகளை அழித்தன., இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவுவதால் 9 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி தொடருமா என பிசிசிஐ வட்டாரம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,இந்தியப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூரின் கீழ் துல்லிய தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத இலக்குகளை ஒருங்கிணைந்த தாக்குதலில் அழிக்கப்பட்டது. பஹவல்பூர், முரிட்கே மற்றும் சியால்கோட் உள்ள முக்கிய இடங்கள் உட்பட பாகிஸ்தானில் நான்கு இடங்களையும்,
25
தீவிரவாத முகாம்கள் அழிப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் (PoJK) ஐந்து இடங்களையும் இந்தியப் படைகள் இலக்கு வைத்து அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில் ஈடுபட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவர்களை குறிவைத்து இந்தியப் படைகள் இடங்களைத் தேர்ந்தெடுத்து தாக்கியது.
இதில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 14 பேர் பஹவல்பூரில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியானது
35
ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுமா.?
இந்திய- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கும் என்ற தகவல் வெளியானதையடுத்து இந்தியாவில் உள்ள 9 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படவோ அல்லது ஒத்திவைக்கவோ வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் மே 25 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசன் வழக்கம்போல் தொடரும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலைகள் ஐபிஎல் அட்டவணை மற்றும் போட்டிகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும், அது திட்டமிட்டபடி தொடரும் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மக்களவை தேர்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் இருந்து தென் ஆப்ரிக்கா மற்றும் துபாயில் நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக போட்டியானது மீண்டும் துபாயில் நடத்தப்பட்டது.
55
திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி
2022 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டி இந்தியாவில் மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. இதனையடுத்து 2023 முதல் ஐபிஎல் மீண்டும் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போதைய சூழலில் ஐபிஎல் போட்டிக்கு எந்தவித பாதிப்பும் இல்லையெனவும் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.