இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய டாப் 5 இந்திய வீரர்கள்!

Published : May 07, 2025, 02:16 AM IST

Top 5 Indian Players vs England Test Series : இந்திய அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இன்னும் அறிவிக்கப்படாத இந்திய அணிக்காக ஆட்டத்தை மாற்றக்கூடிய டாப் 5 வீரர்களைப் பற்றி இங்கே காண்போம்.  

PREV
17
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய டாப் 5 இந்திய வீரர்கள்!
இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்

ஐபிஎல் 2025 தொடருக்கு பிறகு இந்திய அணி வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஜூலை 31 வரை டெஸ்ட் தொடரில் விளையாடும்.

27
5 வீரர்கள் மீது எதிர்பார்ப்பு

ஆஸ்திரேலியாவிடம் தோற்றதை மறந்து புதிய தொடக்கத்தை இந்திய அணி எதிர்நோக்குகிறது. 5 வீரர்களின் தோள்களில் பெரும் பொறுப்பு உள்ளது. இவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

37
சுப்மன் கில்

சுப்மன் கில் தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தவர். வெளிநாடுகளில் அவருடைய பேட்டிங் சிறப்பாக இல்லாவிட்டாலும், அவரது நுட்பம் மற்றும் திறமை சிறப்பானது. 3வது இடத்தில் களமிறங்கி முக்கிய பொறுப்பை சுமப்பார். ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

47
விராட் கோலி

விராட் கோலி எப்போதும் இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கை நட்சத்திரம். உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, இங்கிலாந்து மண்ணிலும் ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக உள்ளது. ஐபிஎல் 2025 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனுடைய தாக்கம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

57
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து தொடரில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற ராட்சச பந்துவீச்சாளர்களை சமாளித்து ரன்கள் குவித்த அனுபவம் அவருக்கு உண்டு.

67
பிரசித் கிருஷ்ணா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர், இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக செயல்படுவார்.

77
ஜஸ்பிரித் பும்ரா

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்கு எப்போதும் நம்பிக்கை நட்சத்திரம். அவரது உடற்தகுதி சிறப்பாக இருந்தால், இங்கிலாந்து தொடரில் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் இந்திய அணியை கூட வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக ரோகித் சர்மாவின் கேப்டன்ஸி மீது கடுமையான விமர்சனம் எழுந்து வரும் நிலையில் அவருக்குப் பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories