MI vs GT IPL 2025 Match Results in Tamil : மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 155 ரன்கள் எடுத்தது. மழைக்குப் பிறகு DLS முறைப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 16 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசி ஓவரில் அந்த இலக்கை அடைந்து குஜராத் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ்
MI vs GT IPL 2025 Match Results in Tamil : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 30 ரன்களுக்குள் இரு தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ராயன் ரிகல்டன் ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. ரோஹித் 7 ரன்களில் அர்ஷத்கான் பந்துவீச்சிலும், ரிகல்டன் 2 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
27
வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் யாதவ் ஜோடி
தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்த பிறகு வில் ஜாக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் மும்பை அணியின் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகரித்தனர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தனர். சூர்யா 35 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 0 மற்றும் 29 ரன்களில் வில் ஜாக்ஸ் கொடுத்த கேட்ச வாய்ப்பை ஜிடி வீரர்கள் தவறவிட்டனர். 35 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உதவியுடன் 53 ரன்கள் எடுத்தார். ஆனால், அதிக நேரம் களத்தில் நீடிக்கவில்லை. ரஷித் கான் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
37
சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள்
மும்பை அணியின் மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா 1, நமன் தீர் 7 மற்றும் கார்பின் போஷ் 27 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 156 ரன்கள் இலக்கைத் துரத்திய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் 5 ரன்களில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தது பின்னடைவாக அமைந்தது.
சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் நிதானமாக ஆடி குஜராத் அணியின் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகரித்தனர். இருவரும் இணைந்து 72 ரன்கள் சேர்த்தனர். ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்த பிறகு, ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் அதிரடியாக ஆடினார். அவர் அடித்த பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவின.
57
ராகுல் திவாட்டியா - ஜெரால்டு கோட்ஸி ஜோடி
குறைந்த ஸ்கோர் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுப்மன் கில் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை அவர் ஆட்டமிழக்கச் செய்தார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியபோது, GT அணிக்கு 16 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தீபக் சாஹர் பந்துவீச்சில் ராகுல் திவாட்டியா மற்றும் ஜெரால்ட் கோட்ஸி இருவரும் இணைந்து DLS முறைப்படி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
67
நம்பர் 1 இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்
இந்த வெற்றியின் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது. ஆர்சிபி 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு செல்ல, பஞ்சாப் கிங்ஸ் 15 புள்ளிகளுடன் 3ஆவது இடமும், மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடன் 4ஆவது இடமும் பிடித்துள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணி 13 புள்ளிகள் பெற்று 5ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் 19 புள்ளிகள் பெறும்.
77
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்
இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் டாப் 3 இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்த ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியை சந்திக்கும். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுவிடும். மாறாக ஒரு போட்டியில் தோல்வி அடைந்து மற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.