Ravindra Jadeja
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்கிறது. இந்நிலையில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள அடிக்கவில்லை என சரமாரியாக விமர்சனம் வைத்தார்.
Ravindra Jadeja Press Conference
விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோரை குறிவைத்து தான் ஜடேஜா விமர்சனம் செய்தார் என ஒருபக்கம் தகவல்கள் பரவி வரும் நிலையில், ஜடேஜா செய்தியாளர்கள் சந்திப்பில் ஒத்துழைக்கவில்லை என்று ஆஸ்திரேலியா ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதாவது அவர் ஆஸ்திரேலிய ஊடகங்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
''நாங்கள் கேட்கும் கேள்விக்கு ஜடேஜா ஆங்கிலத்தில் பதில் அளிக்காமல், இந்தியில் பதில் அளித்தார். இதனால் அவர் பேசுவது புரியாமல் குழப்பம் அடைந்தோம்'' என்று சேனல் 7 என்ற ஆஸ்திரேலியா ஊடகம் கூறியுள்ளது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஆஸ்திரேலிய ஊடகங்கள் அழைக்கப்பட்டு இருந்தாலும் இந்திய ஊடகங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கபட்டது என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மாவுக்கு காயம்; 4வது டெஸ்ட் விளையாடுவதில் சிக்கல்?; மீண்டும் கேப்டனாகும் பும்ரா?
Australian media Accused Jadeja
ஆனால் ஆஸ்திரேலியா ஊடகங்கள் பொய் குற்றச்சாட்டு கூறுவதாகவும், உண்மையில் அங்கு நடந்தது வேறு என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. அதாவது செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்திய ஊடகங்கள் அவரிடம் இந்தியில் கேள்விகள் கேட்டதால் ஜடேஜாவும் இந்தியில் பதில் கூறினார். இதேபோல் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஆங்கிலத்தில் பதில் அளிக்க மறுக்கவில்லை. ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் எந்த நேரத்திலும் நிராகரிக்கவில்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
India vs Australia Test
மேலும் ஜடேஜாவின் செய்தியாளர் சந்திப்பு இந்திய ஊடகங்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஜடேஜா பேட்டி குறித்த செய்தி இந்திய ஊடகங்களின் வாட்ஸ்அப் குழுவில் மட்டுமே அனுப்பப்பட்டது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் மோதல் ஏற்படுவது இது முதன்முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பாக தனது குழந்தையை புகைப்படம் எடுப்பதாக கூறி பத்திரிகையாளர்களுடன் விராட் கோலி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வீரர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
வார்னர் முதல் DK வரை 2024ல் கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன அதிரடி வீரர்கள்