Sam Konstas Batting
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்து விட்டன. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் அடிலெய்டில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்நிலையில்,'பாக்சிங் டே டெஸ்ட்' எனப்படும் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் களமிறங்கினார்கள்.
India vs Australia Test
சாம் கான்ஸ்டாஸுக்கு இது அறிமுக போட்டியாகும். முதல் ஓவரில் பும்ராவின் பந்தை பொறுமையாக கையாண்ட சாம் கான்ஸ்டாஸ் அதன்பின்பு அதிரடியில் வெளுத்துக் கட்டினார். நாலாபக்கமும் மட்டையை சுழற்றிய அவர் பும்ராவின் ஓரே ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 14 ரன்கள் திரட்டினார். பும்ராவின் பந்தை பயமின்றி எதிர்கொண்ட சாம் கான்ஸ்டாஸ் கீப்பருக்கு மேலே சில வித்தியாசமான ஸ்கூப் ஷாட்களை விளாசி பும்ராவை மிளர வைத்தார்.
டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: புதிய வரலாறு படைத்த ஸ்விங் மன்னன் பும்ரா
India vs Australia 4th Test
பும்ரா மட்டுமின்றி சிராஜின் ஷாட் பாலிலும் பவுண்டரிகளை விளாசிபட்டையை கிளப்பினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசினார். மறுபக்கம் உஸ்மான் கவாஜா நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஸ்கோர் 89 ரன்களை எட்டியபோது சாம் கான்ஸ்டாஸ் 65 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அவர் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசினார்.
Jasprit Bumrah Bowling
பின்பு ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்சேனும், கவாஜாவும் தொடர்ந்து ஆடி வருகின்றனர். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய ஓபனிங் பார்ர்னர்ஷிப் 50 ரன்கள் கடப்பது இதுவே முதன்முறையாகும். மேலும் உணவு இடைவேளை வரை இந்திய பாஸ்ட் பவுலர்கள் விக்கெட் எடுக்காமல் இருப்பதும் இதுவே முதன்முறையாகும்.
பயமின்றி அதிரடியாக விளையாடி இந்திய பவுலர்களை ஓடவிட்ட சாம் கான்ஸ்டாஸ் அவுட் ஆனவுடன் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கிரிக்கெட் - பாக்சிங் என்ன சம்பந்தம்? Boxing Day டெஸ்ட்னு ஏன் சொல்றாங்க தெரியுமா?