பாராலிம்பிக்; ஒற்றை புள்ளியில் மிஸ்ஸான உலக சாதனை - ஷீத்தல் தேவி அசத்தல்

Published : Aug 30, 2024, 12:45 AM IST

பாராலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி ஒரு புள்ளி வித்தியாசத்தில் உலக சாதனையை தவற விட்டுள்ளார்.

PREV
13
பாராலிம்பிக்; ஒற்றை புள்ளியில் மிஸ்ஸான உலக சாதனை - ஷீத்தல் தேவி அசத்தல்
Sheetal Devi

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தற்பொது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கி விறுவறுப்பாக நடைபெற்று வருகின்றன. வியாழன் அன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி ஒரே ஒரு புள்ளியில் உலக சாதனையை தவற விட்டுள்ளார்.

23
Sheetal Devi

பாராலிம்பிக் வில்வித்தை போட்டி தரவரிசைச் சுற்றில் இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி பாராலிம்பிக் சாதனைகள் மட்டுமல்லாது உலக சாதனையையும் முறியடித்து 720க்கு 703 புள்ளிகள் பெற்று அசத்தி உள்ளார்.

33
Sheetal Devi

தகுதிச் சுற்றில் பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் க்யூர் 704 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஸ்ட்ரெட்டன் (694 புள்ளிகள்), போப் பேட்டர்சன் (698 புள்ளிகள்) ஆகியோரின் முந்தைய சாதனைகளை ஓஸ்னூர் க்யூர் மற்றும் ஷீத்தல் தேவி முறியடித்துள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.

click me!

Recommended Stories