ICC டெஸ்ட் தரவரிசை பட்டியல்; அஸ்வின், ஜடேஜா ஆதிக்கம்

First Published | Aug 30, 2024, 12:07 AM IST

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வியாழன் அன்று வெளியிடப்பட்ட நிலையில், பந்து வீச்சாளர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

R Ashwin

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வியாழன் அன்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள், பௌலர்கள், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். இவரைத் தொடர்ந்து 847 புள்ளிகளுடன் ஜோஷ் ஹேசில்வுட் 2வது இடத்திலும், மற்றொரு இந்திய வீரர் பும்ரா 847 புள்ளிகளுடன் ஹேசில் உட்டுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

R Jadeja

இதே போன்று டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மற்றொரு இந்திய வீரர் அஸ்வின் 322 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்த வரிசையில் அக்சர் படேல் 6வது இடத்தில் நீடிக்கிறார்.

Tap to resize

Joe Root

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முறையே ரோகித் ஷர்மா 751 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், ஜெய்ஷ்வால் 740 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், விராட் கோலி 737 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்த பட்டியலில் 881 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

Latest Videos

click me!