IPL: ஐபிஎல்லுடன் ஓய்வு பெறும் 7 ஸ்டார் வீரர்கள்! சிஎஸ்கேவில் 2 பேர்! முழு விவரம்!

Published : May 08, 2025, 01:13 PM IST

ஐபிஎல் தொடருடன் 7 ஸ்டார் வீரர்கள் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் யார்? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
IPL: ஐபிஎல்லுடன் ஓய்வு பெறும் 7 ஸ்டார் வீரர்கள்! சிஎஸ்கேவில் 2 பேர்! முழு விவரம்!
7 players who will retire in IPL 2025

ஐபிஎல் 2025 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இப்போதைய சூழ்நிலையில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நிலையில் உள்ளன. இந்நிலையில், சில முன்னணி வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

24
மகேந்திர சிங் தோனி (சிஎஸ்கே)

43 வயதான எம்எஸ் தோனியால் சரிவர பேட்டிங் செய்ய முடியவில்லை. நடப்பு தொடரில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 30 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 138.18. பேட்டிங் மட்டுமின்றி தோனியின் கேப்டன்சியும் சுமாரகவே இருந்தது. இதனால் புதிய சிஎஸ்கே அணியை கட்டமைக்க நேரம் வந்து விட்டது. சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டியில் தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜிங்க்யா ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) 

ஐபிஎல் 2025ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் 36 வயது அஜிங்க்யா ரஹானே, 9 போட்டிகளில் 271 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று அரைசதங்களை மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங் நிலையாக உள்ளது. மேலும் ஸ்டிரைக் ரேட்டும் கேள்விக்குறியாகி உள்ளது. கேப்டன்சியிலும்  ரஹானே சரியாக செயல்படாத நிலையில், ஓய்வு பெற அதிகம் வாய்ப்புள்ளது. 

34
ரவிச்சந்திரன் அஷ்வின் (சிஎஸ்கே)

பெரிதும் எதிர்பார்ப்புடன் ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், 8க்கு மேல் எகானமி ரேட்டுடன் 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார். பேட்டிங்கிலும் அணிக்கு பங்களிக்க முடியவில்லை.

மொயின் அலி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான 37 வயதான மொயின் அலி ஐபிஎல் 2025 சீசனில் மோசமாக விளையாடி வருகிறார். அவரது இரண்டு பேட்டிங் வாய்ப்புகளில் 5 மற்றும் 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். பவுலிங்கில் அதிகப்பட்ச ரன்களை விட்டுக்கொடுத்தார். மொயின் அலி ஓய்வு பெற இதுவே சரியான தருணம்.

44
ஃபாஃப் டு பிளெசிஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்)

ஐபிஎல் 2025 இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் 40 வயதான ஃபாஃப் டு பிளெசிஸ் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு அரை சதம் உள்பட 7 போட்டிகளில் 185 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெல்லி அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுக்க கூடிய அளவுக்கு அவரது ஆட்டம் இல்லை.

இஷாந்த் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்) 

குஜராத் டைட்டன்ஸ் வீரரான இஷாந்த் சர்மாவின் ஐபிஎல் 2025 சீசன் ஏமாற்றமளிக்கிறது. விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறிய அவர் அதிக எகானமி ரேட்டில் ரன்களை விட்டுக்கொடுத்தார். SRHக்கு எதிராக 4 ஓவர்களில் 0/53 மற்றும் RRக்கு எதிராக 2 ஓவர்களில் 0/36  என ரன்களை வாரி வழங்கினார். 36 வயதான இஷாந்த் சர்மாவால் பீல்டிங்கிலும் செயல்பட முடியவில்லை.

கரண் சர்மா (மும்பை இந்தியன்ஸ்) 

மும்பை இந்தியன்ஸ் வீரர் 37 வயதான கர்ண் சர்மா 2025 ஐபிஎல் சீசனில் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி செயல்படவில்லை. சில போட்டிகளில் மேட்ச் வின்னராக ஜொலித்தாலும் அவரிடம் பழைய பந்துவீச்சு இல்லை. மும்பையில் இளம் ஸ்பின்னர்கள் வந்து விட்ட நிலையில், கரண் சர்மா ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories