சாம்பியன்ஸ் டிராபி 2025: விக்கெட்டுகளை கொத்தாக அள்ளப்போகும் 5 பவுலர்கள்!

Published : Feb 16, 2025, 01:47 PM IST

மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி அதிக விக்கெட்டுகளை அள்ளப்போகும் 5 பவுலர்கள் குறித்து பார்க்கலாம். 

PREV
15
சாம்பியன்ஸ் டிராபி 2025: விக்கெட்டுகளை கொத்தாக அள்ளப்போகும் 5 பவுலர்கள்!
சாம்பியன்ஸ் டிராபி: விக்கெட்டுகளை கொத்தாக அள்ளப்போகும் 5 பவுலர்கள்!

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் எடுப்பவராக இருக்கலாம். ஏனெனில் 2023ல் இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடிய ஆசியக் கோப்பையில் குல்தீப் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அணியில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவராக இருந்தார். 30 வயதான குல்தீப் துபாய் மைதானத்தில் மொத்தம் 10 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

துணைக்கண்ட சூழ்நிலைகளில் சிறந்து விளங்கும் திறனைக் காட்டியுள்ளார். துபாயில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டு, முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து பந்துவீசுவதில் குல்தீப் யாதவ் இந்தியாவின் முக்கிய சொத்தாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். நடுத்தர வரிசையில் சுழற்பந்து வீச்சை நம்பியிருக்கும் குல்தீப், சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் அதிக விக்கெட் எடுப்பவராக மாறும் திறன் கொண்டவர்.

25
முகமது ஷமி

முகமது ஷமி 

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், முகமது ஷமி இந்திய வேகப்பந்து வீச்சுக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர். ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் நம்பகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஷமி இருந்து வருகிறார்.

இது 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தெளிவாகத் தெரிந்தது. அந்த தொடரில் அவர் 24 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் எடுத்தவராக இருந்தார். எனவே சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் எடுப்பவர்களில் ஷமியும் ஒருவராக இருப்பார். 

ரோகித் சர்மா கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது? பிசிசிஐ அதிரடி முடிவு!

35
வில்லியம் ஓ'ரூர்கே

வில்லியம் ஓ'ரூர்கே 

சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் முத்தரப்பு தொடரில் வில்லியம் ஓ'ரூர்கே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மூன்று போட்டிகளில் 26.83 சராசரியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து ஒருநாள் முத்தரப்பு தொடரை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார். 2024ம் ஆண்டு முதல், ஓ'ரூர்கே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு போட்டியில் நான்கு விக்கெட்டுகளும் அடங்கும். 33.22 சராசரியிலும் 5.76 என்ற சிக்கன விகிதத்திலும் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகவே வில்லியம் ஓ'ரூர்கே போட்டியில் அதிக விக்கெட் எடுப்பவர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

45
ஆடம் ஜாம்பா

ஆடம் ஜாம்பா

சாம்பியன்ஸ் டிராபியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்ட சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லாமல் ஆஸ்திரேலியா உள்ளது. ஆகையால் சிறந்த ஸ்பின் பவுலரான ஜாம்பாவின் பொறுப்பு அதிகரித்துள்ளது. நடு ஓவர்களில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வேரியேஷன்களை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவர். 

2024ம் ஆண்டு முதல் ஆடம் ஜாம்பா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரின் அதிகபட்சமாகும். 2023 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2024 T20 உலகக் கோப்பையில் ஜம்பா ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட் எடுத்தவர் இவர்தான். ஆகவே சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் எடுப்பவர்களின் ஜாம்பா முன்னணியில் இருப்பார். 


 

55
ஆதில் ரஷித்

ஆதில் ரஷித் 

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். மூன்று போட்டிகளில் 27.29 சராசரியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2024ம் ஆண்டு முதல் இங்கிலாந்துக்காக 11 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஒன்பது போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும் இருந்தார். ரஷித் வெவ்வேறு வேரியேஷன்ஸ்களுடன் பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பவர். நடு ஓவர்களில் ரன்ளை கட்டுப்படுத்துவதில் வல்லவர்.

சாம்பியன்ஸ் டிராபி: சிக்ஸர் மழை பொழிந்து அதிரடியில் கலக்கப்போகும் 7 வீரர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories