இந்தியா, நேபாள் சாதனை முறியடிப்பு – டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக மகுடம் சூடிய ஜிம்பாப்வே!

First Published | Oct 23, 2024, 10:03 PM IST

Highest Totals in T20 Cricket, Gambia vs Zimbabwe: நைரோபியில் நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா தகுதி சுற்றில், ஜிம்பாப்வே அணி காம்பியாவுக்கு எதிராக 344 ரன்கள் குவித்து டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய சாதனையைப் படைத்தது.

Gambia vs Zimbabwe T20 Cricket, Highest Scores in T20 Cricket,

Highest Totals in T20 Cricket, Gambia vs Zimbabwe: கென்யாவின் தலைநகரான நைரோபியில் ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா குவாலிஃபையர் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் காம்பியா, ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, சீஷெல்ஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

ICC Mens T20 World Cup Sub Regional Africa Qualifier Group B 2024,

இதில் இன்று 12ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. அதாவது 344 ரன்களை குவித்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது.

Tap to resize

T20 World Cup Sub Regional Africa Qualifier Group B, ZIM vs GM T20 Cricket

பிரையன் பென்னட் மற்றும் தடிவானாஷே மருமணி இருவரும் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் குவித்தது.  இதில் மருமணி 62 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்து வந்த டியான் மேயர்ஸ் 12 ரன்களில் வெளியேறினார். அப்போது ஜிம்பாப்வே 6.6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.

T20 World Cup Qualifier Group B, ZIM vs GM T20 Cricket

பென்னட் 50 ரன்களில் வெளியேறவே முதல் 10 ஓவர்களில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்தது. சிக்கந்தர் ராசா மற்றும் ரியான் பர்ல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் சிக்கந்தர் ராசா 20 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் 33 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.

Zimbabwe Cricket Team, Brian Bennett, Tadiwanashe Marumani, ZIM vs GM T20 Cricket

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக எஸ்தோனியா அணியைச் சேர்ந்த சாஹில் சவுகான் 27 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து விளையாடிய ராசா 43 பந்துகளில் 7 பவுண்டரி 15 சிக்சர்கள் உள்பட 133 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Sikandar Raza, Clive Madande, Andre Jarju, Ismaila Tamba, ZIM vs GM T20 Cricket

இறுதியாக ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்து சரித்திரம் படைத்தது. முன்னதாக நேபாள் 314 ரன்கள் எடுத்ததே டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 19ஆவது ஓவரில் 319 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே இந்த சாதனையை முறியடித்தது.

Gambia, Highest Totals in T20 Cricket,

கடைசி ஓவரில் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி உள்பட 25 ரன்கள் எடுக்கவே ஜிம்பாப்வே 344 ரன்கள் குவித்தது. அதற்கு முன்னதாக போட்டியின் 17ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்த கேப்டன் சிக்கந்தர் ராசா அடுத்து நோபால் + 2 பவுண்டரி ஒரு சிக்சர் உள்பட 35 ரன்கள் எடுக்கவே ஜிம்பாப்வே அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்தப் போட்டியில் மட்டும் ஜிம்பாப்வே மொத்தமாக 27 சிக்சர்கள் அடித்துள்ளது. இதே போன்று, 30 பவுண்டரியும் அடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.

Gambia vs Zimbabwe, Highest Scores in T20 Cricket, ZIM vs GM T20 Cricket

தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணியாக ஜிம்பாப்வே 344/4 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. நேபாள் 314/3 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது. 3ஆவது இடத்தில் 297/6 ரன்களுடன் இந்தியா உள்ளது. நேபாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இந்தியா 17 ரன்களில் கோட்டைவிட்டது. ஆனால், அந்த சாதனையை இப்போது ஜிம்பாப்வே படைத்துள்ளது. இனி வரும் காலங்களில் எந்த அண் இந்த சாதனையை முறியடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பின்னர் விளையாடிய காம்பியா 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்து 290 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. காம்பியா அணியைப் பொறுத்த வரையில் ஆண்ட்ரே ஜார்ஜூ மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற அனைவருமே ஒற்றைப்பட இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

Latest Videos

click me!