கணவன் மனைவியாக கோடி கோடியாய் சம்பாதிக்கும் பும்ரா அண்ட் சஞ்சனா கணேசன் – சொத்து மதிப்பு எத்தன கோடி தெரியுமா?

Published : Oct 23, 2024, 07:57 PM ISTUpdated : Oct 23, 2024, 08:10 PM IST

Jasprit Bumrah and Sanjana Ganesan Net Worth: இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அவரது மனைவி சஞ்சனா கணேசனின் சொத்து மதிப்பு, வருமானம் மற்றும் கார் சேகரிப்பு பற்றிய தகவல்கள் இங்கே. பும்ராவின் சொத்து மதிப்பு ரூ.55 கோடியாகவும், சஞ்சனாவின் சொத்து மதிப்பு ரூ.8 கோடியாகவும் உள்ளது.

PREV
18
கணவன் மனைவியாக கோடி கோடியாய் சம்பாதிக்கும் பும்ரா அண்ட் சஞ்சனா கணேசன் – சொத்து மதிப்பு எத்தன கோடி தெரியுமா?
Jasprit Bumrah and Sanjana Ganesan Salary, Income, Net Worth

Jasprit Bumrah and Sanjana Ganesan Net Worth: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவும், தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனும் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அங்கத் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

28
Sanjana Ganesan Net Worth, Income

தனது வேகப்பந்து வீச்சு திறமையால் இந்திய அணியில் அசைக்க முடியாத இடம் பிடித்துள்ளார் பும்ரா. இக்கட்டான சூழலில் அணிக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு சம்பவம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடைபெற்றது.

38
Jasprit Bumrah, Sanjana Ganesan

இது போன்று பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். தற்போது டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் தவிர, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் ரூ.12 கோடிக்கு விளையாடி வந்த பும்ரா இனி வரும் சீசன்களில் ரூ.20 கோடி வரையில் அவரது சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

48
Jasprit Bumrah Brand Endorsement, Sanjana Ganesan Net Worth

அகமதாபாத் மாநிலம் குஜராத்தில் பிறந்து வளர்ந்த பும்ராவின் சொத்து மதிப்பு ரூ.55 கோடி. பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ஆண்டிற்கு ரூ.7 கோடி வரையிலும், ஐபிஎல் தொடர் மூலமாக ஆண்டிற்கு ரூ.12 கோடியும் வருமானம் பெறுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ரூ.15 லட்சம், ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ரூ.6 லட்சம், டி20 கிரிக்கெட்டிற்கு ரூ.3 லட்சம் என்று வருமானம் பெறுகிறார்.

58
Jasprit Bumrah Car Collection, Sanjana Ganesan Net Worth

இதுதவிர Dream11, ASICS, OnePlus Wearables, Zaggle, Seagram's Royal Stag என்று பல நிறுவனங்களுடன் பிராண்ட் ஒப்பந்தம் பெற்றுள்ளார். இதன் மூலமாக வருடத்திற்கு ரூ.2 கோடி வரையில் வருமான பெறுகிறார். பும்ரா தனது சொந்த ஊரான அகமதாபாத்தில் ரூ.3 கோடி மதிப்பில் அடுக்குமாடி வீடு வைத்துள்ளார். அதொடு புனேயில் ரூ.3 கோடி மதிப்பிலும், மும்பையில் ரூ.2 கோடி மதிப்பிலும் வீடு வைத்துள்ளார்.

மற்ற கிரிக்கெட் வீரர்கள் போன்று பல விதமான சொகுசு கார்களை வைத்துள்ளார். மெர்சிடெஸ், ரேஞ்ச் ரோவர், நிசான் உள்பட பல கார்கள் வைத்திருக்கிறார்.

68
Jasprit Bumrah and Sanjana Ganesan Net Worth, Car Collection

ரூ.2.54 கோடி மதிப்பு கொண்ட Mercedes Maybach S560 ஒன்றும், ரூ. 87 லட்சம் மதிப்பு கொண்ட Range Rover Velar காரும் வைத்திருக்கிறார். அதோடு, ரூ.2.12 கோடி மதிப்பு கொண்ட Nissan GT-R காரும் வைத்திருக்கிறார். இந்த ஆடம்பர சொகுசு கார்கள் தவிர பும்ராவின் கார் கலெக்‌ஷனில் ரூ. 25 லட்சம் கொண்ட டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் ரூ. 8 லட்சம் மதிப்பு கொண்ட சுசூகி டிசையர் காரும் வைத்திருக்கிறார்.

78
Jasprit Bumrah Net Worth, Car Collection

பும்ராவைப் போன்று அவரது மனைவி சஞ்சனா கணேசனும் கோடிக் கணக்கில் வருமானம் பெறுகிறார். பி டெக் பிரிவில் கோல்டு மெடல் பதக்கம் வென்ற சஞ்சனா, தொகுப்பாளராக வருவதற்கு முன்னதாக ஐடி நிறுவனத்தில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியிருக்கிறார். 2012ல் ஃபெமினா ஸ்டைல் ​​திவா போன்ற அழகுப் போட்டிகளிலும், 2013ல் ஃபெமினா மிஸ் இந்தியாவிலும் பங்கேற்றார்.

88
Jasprit Bumrah, Sanjana Ganesan Net Worth

எனினும், அதன் பிறகு அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிவி தொகுப்பாளராக பணியை தொடங்கினார். கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற பல்வேறு சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக அதிகளவில் பிரபலமடைந்தார்.

தற்போது சஞ்சனா கணேசனின் சொத்து மதிப்பு ரூ.8 கோடி ஆகும். ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையில் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories