இந்தியா – நியூசிலாந்து 2ஆவது டெஸ்ட்: டானா புயலால் புனேயில் மழைக்கு வாய்ப்பு?

First Published | Oct 23, 2024, 5:40 PM IST

Dana Cyclone May Affect India vs New Zealand 2nd Test: புனேயில் நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியானது டானா புயல் மழையால் பாதிக்கப்படக் கூடுமா என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

Pune test, India vs New Zealand 2nd Test

Dana Cyclone May Affect India vs New Zealand 2nd Test: பெங்களூருவில் இந்தியா-நியூசிலாந்து தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டது. முதல் நாள் ஆட்டம் முழுவதுமே கைவிடப்பட்டது. அதன்பிறகு 4ஆவது நாளிலும் மழை பெய்தது. இதே போன்று நாளை 24ஆம் தேதி வியாழக்கிழமை புனேவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது மழை குறுக்கிடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

India vs New Zealand Pune Test

வங்காள விரிகுடாவில் டானா புயல் உருவாகி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இயற்கை பேரிடர் அச்சம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவையும் மழை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் வானிலை முன்னறிவிப்பு அந்த அச்சத்தைத் தணிக்கிறது.

Tap to resize

Dana Cyclone, Pune 2nd Test

அடுத்த 5 நாட்களும் புனேவில் வறண்ட வானிலை நிலவும். நாளை 24ஆம் தேதி இந்தியா-நியூசிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் காலையில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் வானில் லேசான மேகமூட்டம் இருக்கலாம். ஆனால் மதியம் மேகங்கள் விலகிவிடும். வியாழக்கிழமை முதல் திங்கள் வரை புனேவில் மழைக்கு வாய்ப்பில்லை. 5 நாட்களும் வெயில் அடிக்கும் வானிலை நிலவக்கூடும். இதனால் இந்தப் போட்டி மழை இடையூறு இல்லாமல் நடக்க வாய்ப்புள்ளது.

India vs New Zealand 2nd Test, Pune, Dana Cyclone

புனேவில் ஆடுகளம் எப்படி இருக்கும்?

வானிலை ஆய்வு மையம், இந்தியா-நியூசிலாந்து தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் போது அவ்வப்போது மேகமூட்டமான வானிலை காணப்படும் என்று கணித்துள்ளது. ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை. பகலில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கலாம். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

Cyclone Dana, India vs New Zealand

வெயில் இருந்தால், போட்டி நடைபெறும்போது ஆடுகளம் வறண்டுவிடும். இதனால் ஆடுகளம் மெதுவாகி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். புனேவில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கக்கூடும்.

India vs New Zealand Test

மீண்டு வருவதில் குறியாக இருக்கும் இந்தியா:

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டுமானால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டும். எனவே புனே போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

Latest Videos

click me!