சாஹலின் 'அந்த' சர்ச்சைக்குரிய டீ சர்ட்..! விவாகரத்துக்கு காரணம் என்ன? மனமுடைந்து பேசிய தனஸ்ரீ!

Published : Aug 20, 2025, 10:07 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவுடனான விவாகரத்து நாளில் சர்ச்சைக்குரிய 'சுகர் டாடி' டீ-சர்ட் அணிந்தது குறித்து தனஸ்ரீ வர்மா முதல் முறையாகப் பேசியுள்ளார். அவரது கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
15
Yuzvendra Chahal ex Wife Dhanashree Clarifies Sugar Daddy Tshirt

இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலும், நடனக் கலைஞர் தனஸ்ரீ வர்மாவும் காதலித்து 2020ல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், அவர்களின் உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் 18 மாதங்கள் தனித்தனியாக வாழ்ந்தனர். இறுதியாக 2025 மார்ச் 20 அன்று பந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர்.

25
சாஹலின் டீ-சர்ட் சர்ச்சை

யுஸ்வேந்திர சாஹலுக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் விவாகரத்து ஆகி சில மாதங்கள் ஆகின்றன. விவாகரத்து நாளில் சாஹல் அணிந்திருந்த டீ-சர்ட் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றத்திற்கு வந்த சமயத்தில் யுஸ்வேந்திர சாஹல் கருப்பு நிற டீ-சர்ட் அணிந்திருந்தார். அந்த டீ-சர்ட்டில் “Be Your Own Sugar Daddy” என்று எழுதப்பட்டிருந்தது. இது ஊடகங்கள் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து பல விவாதங்களும் நடந்தன.

35
தனஸ்ரீ வர்மா மீது நெட்டிசன்கள் விமர்சனம்

சாஹல் இந்த டீ-சர்ட்டை அணிந்து நீதிமன்றத்திற்கு வந்ததால் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. சில நெட்டிசன்கள் சாஹல் தனது முன்னாள் மனைவி தனஸ்ரீயை அவமதிக்கும் நோக்கில் இந்த வாசகம் கொண்ட டீ-சர்ட்டை அணிந்ததாகக் குற்றம் சாட்டினர். சாஹல் இதுபோன்ற டீ-சர்ட் அணிந்ததால், வேறு சில நெட்டிசன்கள் தனஸ்ரீ சாஹலை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டினர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் தனஸ்ரீ அமைதியாக இருந்தார். தற்போது இந்த விவகாரம் குறித்து அவர் மனம்திறந்து பேசியுள்ளார்.

45
தனஸ்ரீ என்ன சொன்னார்?

இந்த சர்ச்சை குறித்து முதல் முறையாக தனஸ்ரீ வர்மா பேசியுள்ளார். “அவர் முதலில் நீதிமன்றத்திலிருந்து வெளியே சென்றுவிட்டார். நான் நீதிமன்றத்திற்கு உள்ளேயே இருந்தேன். அதனால் அவர் என்ன டீ-சர்ட் அணிந்திருந்தார் என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார். மேலும், “யாராவது அப்படி ஒரு செய்தியைச் சொல்ல விரும்பினால் வாட்ஸ்அப்பிலும் அனுப்பலாம். ஆனால் டீ-சர்ட் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டிய அவசியம் என்ன?” என்று தனஸ்ரீ வர்மா கேள்வி எழுப்பினார்.

55
வேதனையை நினைவுகூர்ந்த தனஸ்ரீ

நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியபோது, மனதளவில் தான் தயாராக இருந்தபோதிலும், சிறிது நேரம் உணர்ச்சிவசப்பட்டதாக தனஸ்ரீ தெரிவித்தார். “நீதிமன்றத்தில் விவாகரத்துக்கான இறுதித் தீர்ப்பு வரும்போது நான் நீதிமன்றத்தில் இருந்தேன். அனைவரது முன்னிலையிலும் நான் அழுதேன். நான் அழுதபோதும் சாஹல் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த நேரம் மிகவும் வேதனையாக இருந்தது” என்றார். அதன் பிறகு, ஊடகங்களைச் சந்திக்க விருப்பமில்லாமல் நீதிமன்றத்தின் பின்புறக் கதவு வழியாக வீட்டிற்குத் திரும்பிச் சென்றதாகவும், அப்போது தான் சாதாரண ஜீன்ஸ், சட்டை அணிந்திருந்ததாகவும் தனஸ்ரீ வர்மா கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories