எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததே தோனி தான் – யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு!

First Published | Sep 2, 2024, 11:21 AM IST

தனது மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததே தோனி தான் என்று யுவியின் தந்தை யோகராஜ் சிங் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதற்கும் தோனியே காரணம் என்று அவர் கூறினார். ஆனால், யுவராஜ் சிங் ஒருபோதும் தோனியைப் பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்ததில்லை.

Yuvraj Singh and Yograj Singh

தனது மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததே தோனி தான் என்று யுவியின் தந்தை யோகராஜ் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பல முறை இது போன்று குற்றம் சாட்டிய நிலையிலும், யுவராஜ் சிங் ஒரு முறை கூட தோனியைப் பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் யுவி மற்றும் தோனி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

Yuvraj Singh

அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். கடந்த 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டு நடைபெற்ற, தோனியின் தலைமையின் கீழ் இந்தியாவின் வரலாற்று T20 உலகக் கோப்பை மற்றும் ODI உலகக் கோப்பை வெற்றிகளில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகித்தார்.

Tap to resize

MS Dhoni

இந்த நிலையில் சமீபத்தி ஜீ ஸ்விட்ச் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், தோனி தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டதாக மீண்டும் குற்றம் சாட்டினார். மேலும் ஒருபோதும் நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். வாழ்க்கையில் எனக்கு தவறு செய்த யாரையும் நான் மன்னிக்கவே இல்லை.

Yuvraj Singh

அதுமட்டுமின்றி எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி நான் அவர்களை கட்டிப்பிடித்ததில்லை என்று யோகராஜ் கூறினார். அதோடு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதற்கும் தோனியை குற்றம் சாட்டினார்.

MS Dhoni and Yuvraj Singh

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்ற யுவராஜ் சிங் 402 சர்வதேச போட்டிகளில் விளையாடி 11,178 ரன்கள் எடுத்துள்ளார். இதில், அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 71 அரைசதங்கள் மற்றும் 17 சதங்கள் விளாசியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!