
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்தியா 6 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடருக்கு திரும்புகிறது. 6 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பும் இந்திய அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடுகிறது.
வரும் 19 ஆம் தேதி வங்கதேச டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. ஏற்கனவே பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்த வங்கதேசம், இந்தியாவிலும் அதே வரலாற்று சாதனையை நோக்கி கால் பதிக்கிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணி வீரர்கள் துலீப் டிராபியில் பங்கேற்பார்கள். இந்த தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வீரர்கள் இந்தியா ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளாக பிரிந்து விளையாடுகின்றனர்.
சுப்மன் கில், கேஎல் ராகுல், ரியான் பராக், துருவ் ஜூரெல், திலக் வர்மா, ஷிவம் துபே, கலீல் அகமது, ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் ஆகியோர் பலர் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
துலீப் டிராபி தொடரில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இடம் பெறவில்லை. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடினார். இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு தனிப்பட்ட காரணம் தொடர்பாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகினார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் 27 ஆம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் இந்த தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.
ஓபனிங்:
ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குகிவார்கள். சிறந்த ஓபனிங் ஜோடியாக இருவரும் சாதனை படைத்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள்.
மிடில் ஆர்டர்:
சுப்மன் கில் 3ஆவது வரிசையில் களமிறங்கலாம். இவரைத் தொடர்ந்து விராட் கோலி வருவார். சர்ஃபராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். ஒயிட் பால் கிரிக்கெட்டில் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில்லிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதே பொறுப்பு வழங்கப்படலாம்.
ஆல்ரவுண்டர்:
வேறு யாருமில்லை, அஸ்வின், அக்ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் ஸ்பின்னர்களாக களமிறங்குவார்கள். இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் குல்தீப் யாதவ் இடம் பெறலாம்.
விக்கெட் கீப்பர்:
டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு ரிஷப் பண்ட் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே துருவ் ஜூரெலும் விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், ரிஷப் பண்டிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும். அதோடு அவரே பிளேயிங் 11லும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சாளர்கள்:
குல்தீப் யாதவ் தனது இடத்தை தக்க வைக்க வாய்ப்பிருக்கிறது. இதே போன்று முகமது சிராஜ் அணியில் இடம் பெறுவார். ஆனால், ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற வாய்ப்பில்லை. பும்ராவிற்கு பதிலாக முகேஷ் குமார் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான உத்தேச இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் சிங்.