முறியடிக்க கடினமாக இருக்கும் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் சாதனைகள் | Rohit Sharma Records

First Published | Sep 1, 2024, 11:31 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்கள் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

rohit sharma 264

தோனிக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். டிராபியை வென்று கொடுத்த கையோடு டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணியில் ரோகித் சர்மா ஒரு அங்கமாக இருந்தார்.

Rohit Sharma

ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னை சிறந்த பேட்ஸ்மேனாக நிலைநிறுத்திக் கொண்டார். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரோகித் சர்மா முறியடிக்க கடினமாக இருக்கும் சாதனைகளை படைத்துள்ளார். அது என்னென்ன என்று பார்க்கலாம்.

Latest Videos


Rohit Sharma

ரோகித் சர்மா படைத்த பெரும்பாலான சாதனைகள் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து வந்தவை. கடந்த 2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இவரைத் தொடர்ந்து நவம்பர் 2014 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 173 பந்துகளில் 264 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை இதுவரையில் யாரும் முறியடிக்கவில்லை.

Rohit Sharma Records

இலங்கைக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் ஈடன் கார்டனில் நடந்தது. விரல் காயத்தால் 3 மாதம் விளையாடாமல் இருந்த ரோகித் சர்மாவின் மறுபிரவேச போட்டி இதுவாகும். ரோகித் 72 பந்துகளில் 50, 100 பந்துகளில் 100, 125 பந்துகளில் 150, 151 பந்துகளில் 200 மற்றும் 166 பந்துகளில் 250 ரன்களை கடந்தார்.

rohit sharma

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம்:

ஒருநாள் கிடிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த ஒரேயொரு வீரர் ரோகித் சர்மா மட்டுமே. அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 158 பந்துகளில் 209 ரன்கள் எடுத்தார். 2ஆவது இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்தார். 3ஆவதாக 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 208 ரன்கள் எடுத்தார்.

Rohit Sharma

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சதங்கள்:

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 122 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 57 ரன்கள் எடுத்தார். 3ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு ஒரு சில போட்டிகளில் குறைவான ரன்களை எடுக்க கடைசியாக இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹாட்ரிக் சதம் விளாசினார்.

Rohit Sharma Records

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:

ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மே சிக்ஸர் அடிப்பதில் கில்லாடி வீரர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை கூட ரோகித் சர்மா அசால்ட்டாக முறியடித்துள்ளார். தனது கிரிக்கெட் பயணத்தில் ரோகித் சர்மா 620 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஆனால், கெயில் 553 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

Rohit Sharma, cricket

இந்தியாவிற்காக அதிக டி20 போட்டிகள்:

இந்தியாவிற்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஹிட் மேன் ரோகித் சர்மா படைத்துள்ளார். ரோகித் சர்மா கடைசியாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதுவரையில் 159 டி20 போட்டிகளில் ரோகித் விளையாடியுள்ளார்.

Rohit Sharma

இவரது இந்த சாதனையை எந்த வீரரும் முறியடிக்கவில்லை. ஆனால், அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் 145 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹர்திக் பாண்டியா 102 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவரால் ரோகித்தின் சாதனையை முறியடிக்க முடியாது.

click me!