தந்தையானார் யுவராஜ் சிங்.. மகன் வரவு குறித்து மகிழ்ச்சி பதிவிட்ட கிரிக்கெட் பிரபலம் .....

Kanmani P   | Asianet News
Published : Jan 26, 2022, 01:16 PM IST

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்- ஹேசல் கீச் தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

PREV
18
தந்தையானார் யுவராஜ் சிங்.. மகன் வரவு குறித்து மகிழ்ச்சி பதிவிட்ட கிரிக்கெட் பிரபலம் .....
Yuvraj Singh

கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் பெயர் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.

28
Yuvraj Singh

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

38
Yuvraj Singh

ஆனால் விதியின் விளையாட்டு, அவருக்கு புற்றுநோய் தாக்கியது. ஆனாலும் அவர் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் வெளிநாடு அதற்கான சிகிசிசை எடுத்து, புற்றுநோய்வை வெற்றிகண்டு, மீண்டும்  உடல் நலம், பலம்  நிருபித்து கிரிக்கெட்டில் டீமில் இடம் பிடித்து களம் இறங்கினார்.

48
Yuvraj Singh

யுவராஜ்சிங்கிற்கும், இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஹாசல் கீச்சுக்கும் சில வருடங்களாகவே காதலித்து வந்தனர். அதன் பின்னர் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

58
Yuvraj Singh

யுவராஜ் சிங்குக்கும் நடிகை ஹேசல் கீச்சுக்கும் 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது.  பாரம்பரிய முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்று முடிந்தது.

68
Yuvraj Singh

இவர்களது திருமணம்  பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே உள்ள பதேகர் சாகிப்பில் நடைபெற்றது. திருமண விருந்தில் விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

78
Yuvraj Singh

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்- ஹேசல் கீச் தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

88
Yuvraj Singh

யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசீர்வதித்துள்ளார். இந்த நற்செய்தியை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆசீர்வாதத்திற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். என குறிப்பிட்டுள்ளார்..

Read more Photos on
click me!

Recommended Stories