ஆனால், கேப்டன் Melie Kerr 24 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அணியை மீட்டார்.ப்ரூக் ஹாலிடே(37 பந்துகளில் 34) நிதானமாக ஆடினார். இஸ்ஸி ஷார்ப் 28 பந்துகளில் 36 ரன்கள் அடித்து டாப் ஸ்கோரர் ஆனார். Suzie Bates கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததால், நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு,லூயிஸ் (53 பந்துகளில் 59) மற்றும் பிரெண்டர்காஸ்ட் (53 பந்துகளில் 59) ஜோடி அபாரமான தொடக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் அடித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது
போட்டி அயர்லாந்து கையில் இருந்தபோது, 18-வது ஓவரில் கேப்டன் கெர் மேஜிக் செய்தார். அந்த ஓவரில் ப்ரெண்டர்காஸ்ட் மற்றும் ரெபேக்கா ஸ்டோகெல் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து, போட்டியை தலைகீழாக மாற்றினார். பின்னர் லூவிசும் அவுட் ஆனார். 116/2 என்ற நிலையில் இருந்து 123/4 என அயர்லாந்து சரிந்தது. இறுதியில், அவர்களால் இலக்கை எட்ட முடியவில்லை. பிரெண்டர்காஸ்ட் பேட்டிங்கில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக அசத்தினார்.