சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோல்வி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா?

First Published Apr 15, 2024, 8:15 PM IST

சிஎஸ்கே அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் சரிந்து 8ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Mumbai Indians IPL 2024 Playoffs

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டுமே இதுவரையில் விளையாடிய போட்டிகளில் ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 1 மற்றும் 2ஆவது இடங்களை பிடித்துள்ளன.

Hardik Pandya, Mumbai Indians

இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 2 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களை பிடித்துள்ளன.

Rohit Sharma, Mumbai Indians

லக்னோ சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6ஆவது இடங்களை பிடித்துள்ளன. இந்த அணிகளைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து 7, 8 மற்றும் 9ஆவது இடங்களை பிடித்துள்ளன.

MI vs CSK, IPL 29th Match

இதில் என்ன பரிதாபம் என்னவென்றால், விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் என்று பேட்டிங் ஆர்டர் கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.

Mumbai Indians IPL Playoffs

ஏற்கனவே ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பு பெற எஞ்சிய 8 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதே போன்று தான் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏற்பட்டுள்ளது.

IPL 2024

நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திலிருந்து 8ஆவது இடத்திற்கு சரிந்தது.

Punjab Kings vs Mumbai Indians, 33rd Match

இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது. எஞ்சிய 8 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

PBKS vs MI, IPL 33rd Match

வரும் 18 ஆம் தேதி பஞ்சாப் ஹோம் மைதானமான முல்லன்பூரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 33ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இது இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி.

Mumbai Indians IPL PlayOffs

இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில், பஞ்சாப் கிங்ஸ் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உண்டு.

IPL 2024 Playoffs

இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் 6ஆவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு உண்டு. எஞ்சிய 8 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே ஹோம் மைதானத்தில் விளையாடுகிறது. 5 போட்டிகளை அவே மைதானத்தில் விளையாடுகிறது.

Mumbai Indians

இதில் கொல்கத்தா, சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சற்று பலம் வாய்ந்ததாக அணிகள் என்பதால் இந்த அணிகளை வீழ்த்திவிட்டால், பஞ்சாப், லக்னோ, டெல்லி அணிகளை எளிதில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு கம்பீரமாக செல்லும் வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கு இந்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

click me!