Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 30ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
RCB vs SRH, 30th IPL Match 2024
இந்தப் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், லாக்கி பெர்குசன் இந்தப் போட்டியின் மூலமாக ஆர்சிபி அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match
இந்த சீசனில் ஹைதராபாத் விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad
இதுவரையில் இரு அணிகளும் மோதிய 22 போட்டிகளில் ஹைதராபாத் 12 போட்டிகளிலும், ஆர்சிபி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், இந்த சின்னச்சுவாமி மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 7 போட்டிகளில் ஆர்சிபி 5 போட்டிகளிலும் ஹைதராபாத் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
RCB vs SRH,30th IPL Match 2024
ஒட்டுமொத்தமாக இந்த மைதானத்தில் ஆர்சிபி விளையாடிய 87 போட்டிகளில் 40 போட்டிகளில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. 42 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டை, 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match
ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆர்சிபிக்கு இன்னும் 8 போட்டிகள் இருக்கிறது.
Faf du Plessis, Pat Cummins
இந்தப் போட்டிகள் உள்பட 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும். ஆனால், அதிலேயும் ஒரு சிக்கல் இருக்கிறது. மற்ற அணிகளின் புள்ளிப்பட்டியல் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் தான் ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, 30th Match
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ:
விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், சௌரவ் சௌகான், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மகிபால் லோம்ரார், விஜயகுமார் வைஷாக், ரீஸ் டாப்ளே, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், சபாஷ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், டி நடராஜன்.