3 போட்டியில் 8 விக்கெட், 2 முறை ஆட்டநாயகன் விருது: பதிரனாவை பேபி மலிங்கா என்று அழைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

First Published | Apr 15, 2024, 2:01 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வின் போது பதிரனாவை, பேபி மலிங்கா என்று அழைப்போம் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.

Matheesha Pathirana

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Tap to resize

Baby Malinga, Matheesha Pathirana

இதில் இருவரும் அதிரடியாக விளையாடினர். பவர் பிளே ஓவரில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு பந்து வீச வந்த மதீஷா பதிரனா தனது முதல் ஓவரின் முதல் பந்திலேயே இஷான் கிஷான் விக்கெட்டை கைப்பற்றினார்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

அவர் 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் முஷ்தாபிஜுர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த திலக் வர்மாவும், பதிரனா பந்தில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழ்ந்தார்.

MI vs CSK, IPL 2024

கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்னில் வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து வந்த டிம் டேவிட் 13, ரொமாரியோ ஷெப்பர்டு 1 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

கடைசி வரை அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Matheesha Pathirana

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திலிருந்து சரிந்து 8ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

IPL 2024

இந்தப் போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MI vs CSK, IPL 29th Match

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மதீஷா பதிரனா 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

Rohit Sharma, Mumbai Indians

போட்டிக்கு பிறகு விருது வழங்கும் நிகழ்வின் போது பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருப்பதாவது: இளம் விக்கெட் கீப்பர் 3 சிக்ஸர்கள் அடித்து எங்களுக்கு உதவினார். இந்த மைதானத்தில் எங்களுக்கு கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் தேவைப்பட்டது.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

நடுவில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். எங்களது மலிங்கா இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். யார்க்கரும் வீசினார். ஷர்துல் தாக்கூர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர்.

MI vs CSK, IPL 2024

ரஹானேவிற்கு நிக்கல் இருந்தது. ஆகையால், அவரை தொடக்க வீரராக களமிறக்கினோம் என்று கூறினார். அப்போது கிரிக்கெட் வர்ணையாளர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் மலிங்கா என்று குறிப்பிட்டீர்களே என்று கேட்டார், அதற்கு பதிலளித்த ருதுராஜ் கெய்க்வாட் பேபி மலிங்கா. அவரை நாங்கள் அப்படித்தான் அழைப்போம் என்று கூறினார்.

Latest Videos

click me!