
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வந்த பிறகு அவரது ஆட்டம் தாங்க முடியவில்லை. வீரர்களிடம் நடந்து கொள்ளும் முறை, அவரது செயல்பாடு, கேப்டன் என்ற ஒரு பொறுப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது.
இதன் காரணமாக ஹாட்ரிக் தோல்வியை மும்பை இந்தியன்ஸ் சந்தித்தது. அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா மீது விமர்சனம் எழுந்தது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை. அந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றது. இதே போன்று, ஆர்சிபி அணிக்கு எதிராக ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அந்த போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தான், நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவீந்திராவும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 21 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். ஷ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தில் ரச்சின் ரவீந்திரா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்த நிலையில் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
இதையடுத்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ரெவியூ எடுக்க அறிவுறுத்த கேப்டன் பாண்டியாவும் ரெவியூ எடுத்தார். இதில், பந்து பேட்டில் பட்டது தெரியவர, அவுட் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
கெய்க்வாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணிக்காக தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் தோனி களமிறங்கினார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் வந்த தோனி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.
4ஆவது மற்றும் 5ஆவது பந்திலேயும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக தோனி 81.48 ஸ்டிரைக் ரேட்டுடன் 27 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தார். இதில், ஒரு முறை ஆட்டமிழந்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக 500 ஸ்டிரைக் ரேட்டுடன் 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.
இதன் மூலமாக ஹர்திக் பாண்டியாவிற்கு தோனி தகுந்த பாடம் புகட்டியுள்ளார். இனி வரும் போட்டிகளில் பாண்டியா கொஞ்சம் சைலண்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸ் முடியவும் தோனி வேகமாக ஓய்வறைக்கு சென்றார். சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். 250 போட்டிகளில் விளையாடிய தோனி 5016 ரன்கள் எடுத்துள்ளார்.
கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இதில் ஷிவம் துபே 38 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்களில் தோல்வியை தழுவியது. இதற்கு காரணமாக தோனி அடித்த அந்த 20 ரன்கள் தான். இனி வரும் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் இருந்தால் மும்பை இந்தியன்ஸ் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.