ஓய்வறைக்கு செல்லும் போது படிக்கட்டில் கிடந்த பந்தை எடுத்து சுட்டி ரசிகைக்கு கொடுத்த தோனி – வைரல் வீடியோ!

First Published | Apr 15, 2024, 1:37 AM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 29ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவிட்டு தோனி தனது அறைக்கு நடந்து செல்லும் போதும் படிக்கட்டில் இருந்த பந்தை எடுத்து சுட்டி குழந்தையிடம் கொடுத்துள்ளார்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றத்திற்காக அஜிங்கியா ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Tap to resize

MI vs CSK, IPL 29th Match

ரஹானே 5 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 21 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

கெய்க்வாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 69 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 17ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக 4 பந்துகள் இருந்த நிலையில் எம்.எஸ்.தோனி களமிறங்கினார். சிஎஸ்கே அணிக்காக இது அவரது 250ஆவது ஐபிஎல் போட்டியாகும்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

இதில் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்ட தோனி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து 4 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் முதல் சிக்ஸர் விளாசியதன் மூலமாக சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Mumbai Indians vs Chennai Super Kings, 29th Match

ஷிவம் துபே 10 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு வேகவேகமாக ஓய்வறைக்கு சென்ற தோனி படிக்கட்டில் ஏறி செல்லும் போது படிக்கட்டிலிருந்த பந்தை எடுத்து சுட்டி ரசிகையிடம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MI vs CSK, Wankhede Stadium

கடின இலக்கை துரத்தி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மட்டுமே 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமால் இருக்க, மற்றர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ரன்களில் தோல்வியை தழுவியது. அந்த 20 ரன்களும் தோனி அடித்த ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!