3 போட்டியில் 2 டக் அவுட் – நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் 360 டிகிரி பேட்ஸ்மேன் – உலகக் கோப்பையில் சநதேகம்!

First Published Apr 15, 2024, 12:42 PM IST

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளில் 2ல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் நிலையில் டி20 உலகக் கோப்பையில் இடம் பெற தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Mumbai Indians, Suryakumar Yadav

கடந்த ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது கணுக்கால் பகுதியில் காயம் அடைந்த நிலையில் தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

Suryakumar Yadav

இதையடுத்து கணுக்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ளார். இதில், 4ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக இடம் பெற்று விளையாடினார். இந்தப் போட்டியில் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

T20 World Cup 2024

ஏற்கனவே ஹாட்ரிக் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் சூர்யகுமார் யாதவ்வின் வருகைக்காக காத்திருந்தது. ஆனால், அவர் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார். இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த 25ஆவது லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.

Mumbai Indians

ஆனால், அவர் களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் பந்திலேயே 2 ரன்கள் எடுத்தார். 5ஆவது பந்தில் சூர்யகுமார் யாதவ், பவுண்டரி விரட்டினார். 7ஆவது பந்தில் சிக்ஸர் விளாசினார். மேலும், 9 மற்றும் 10ஆவது பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர் விரட்டினார்.

Mumbai Indians

கடைசியில் 17 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 52 ரன்களில் அதிவேகமாக அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் எம்.எஸ்.தோனியின் அதிரடியால் 206 ரன்கள் குவித்தது.

SKY, MI vs CSK, IPL 2024

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் 23 ரன்னில் மதீஷா பதிரனா ஓவரின் முதல் பந்திலேயெ ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதே ஓவரின் 3ஆவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

MI vs CSK, IPL 2024

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா மட்டுமே கடைசி வரை நின்று விளையாடி 63 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 186 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்களில் தோல்வியை தழுவியது.

Mumbai Indians, Suryakumar Yadav

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. ஒரு போட்டியில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து தனது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவிற்கு டி20 உலகக் கோப்பையில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Suryakumar Yadav

இந்திய அணியில் 4ஆவது இடத்தில் களமிறங்க கூடியவர் சூர்யகுமார் யாதவ். டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ்வையும் நம்பியிருக்கிறது. இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே, டி20 உலகக் கோப்பையில் இடம் பெற வாய்ப்புகள் இருக்கிறது. இதே நிலையில் தொடர்ந்து விளையாடினால், அவர் டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

click me!