KS Bharat Retirement: இந்திய அணியில் இனி இடமில்லை; 32 வயதில் திடீர் ஓய்வை அறிவித்த விக்கெட் கீப்பர்!

Published : Jun 04, 2026, 10:05 PM IST

இந்திய விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத், 32 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், தனது ஓய்வு முடிவை சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

PREV
14
ஓய்வை அறிவித்த பரத்

இந்திய விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த 32 வயதான இவர், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவின் மூலம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். பரத் இந்தியாவுக்காக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2023-ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பரத் தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் கடைசியாக 2024 பிப்ரவரியில் விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக விளையாடினார்.

24
பரத்ன் கிரிக்கெட் பயணம்

பரத் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 12 இன்னிங்ஸ்களில் 20.09 என்ற சராசரியில் 221 ரன்கள் எடுத்தார். மேலும், அவர் விக்கெட் கீப்பராக 18 கேட்சுகளையும் ஒரு ஸ்டம்பிங்கையும் செய்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணியிலும் அவர் உறுப்பினராக இருந்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகள் அனைத்திலும் தனக்குத் துணையாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்து, பரத் தனது ஓய்வுக் குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

மிகுந்த பெருமையுடனும், அதைவிடப் பெரும் நன்றியுணர்வுடனும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன். என் நாட்டிற்காக விளையாடியதை என் வாழ்வின் மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். இது மிகுந்த கடின உழைப்பையும் மன உறுதியையும் கோரிய ஒரு பயணமாக இருந்தது. இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக விளையாடியது, அனைத்து இன்னல்களுக்கும் தகுதியானதாகவே இருந்தது,” என்று பரத் கூறினார்.

34
ரோகித்க்கு நன்றி..

கடந்த இருபது ஆண்டுகளாகத் தனக்கு ஆதரவளித்த தனது பெற்றோருக்கும் சகோதரிக்கும் பரத் நன்றி தெரிவித்தார். மேலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைப்பதில் ஆதரவளித்த பிசிசிஐ, ஆந்திர கிரிக்கெட் சங்கம், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுக்கும் பரத் நன்றி கூறினார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாட வாய்ப்பளித்து, தனது திறமையை நிரூபிக்க வழிவகுத்த முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் பரத் நன்றி தெரிவித்தார்.

தனது கனவு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பை வழங்கியதற்காக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பரத் நன்றி தெரிவித்தார். இந்திய 'ஏ' அணியிலிருந்து தேசிய அணிக்கு தன்னை வழிநடத்திய முன்னாள் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கிய வழிகாட்டுதல் மறக்க முடியாதது என்று பரத் கூறினார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், கிரிக்கெட் களத்துடனான தனது தொடர்பு முடிவடையாது என்றும் பரத் மேலும் கூறினார். முதல் தர கிரிக்கெட்டில் 113 போட்டிகளில் 11 சதங்களுடன் 6,102 ரன்கள் எடுத்திருக்கும் இந்த வீரர், உள்நாட்டு அளவிலும் வழிகாட்டுதல் துறையிலும் தொடர்ந்து தீவிரமாக செயல்படுவார்.

44
முடிவடையும் அத்தியாயம்

பிசிசிஐ மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுடனான எனது அத்தியாயம் இத்துடன் முடிவடைகிறது. ஆனால், கிரிக்கெட்டுடனான எனது தொடர்பு தொடரும். நான் தொடர்ந்து விளையாடுவேன். இனி எனது கவனம், அடுத்த தலைமுறை இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலையும் பயிற்சியையும் வழங்குவதிலும் இருக்கும். நான் இந்தியாவையும் கிரிக்கெட்டையும் மிகவும் நேசிக்கிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி,” என்று பரத் தெளிவுபடுத்தினார்.

Read more Photos on
click me!

Recommended Stories