ஜிம்பாப்வேயை நசுக்கிய WI.. 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. எகிறிய ரன் ரேட்.. இந்தியாவுக்கு நெருக்கடி!

Published : Feb 23, 2026, 11:13 PM IST

டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி பெற்ற மெகா ரன் ரேட் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
வெஸ்ட் இண்டீசின் அதிரடி பேட்டிங்

டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. சிக்சர் மழை பொழிந்த சிம்ரன் ஹெட்மெயர் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 34 பந்தில் 85 ரன்கள் விளாசினார். ரோமன் பவல் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களும் 59 ரன்கள் நொறுக்கினார்.

24
ஜிம்பாப்வே அணி படுதோல்வி

பின்பு பிரம்மாண்ட இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 17.4 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 107 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. அந்த அணி வீரர் பிராட் எவன்ஸ் 5 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 43 ரன்கள் அடித்தார்.

 கேப்டன் சிக்கந்தர் ராசா (27) உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் வெஸ்ட் இண்டீசின் சுழல் வலையில் வீழ்ந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அகேல் ஹோசின் 4 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

34
வெஸ்ட் இண்டீஸ் 5.350 என்ற மெகா ரன் ரேட்

இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 5.350 என்ற மெகா ரன் ரேட்டை பெற்றுள்ளது. குரூப் 1 பட்டியலிலும் 2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த குரூப்பில் தென்னாப்பிரிக்கா அணி 3.800 என்ற ரன் ரேட்டில் 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் இந்திய அணி எந்த ஒரு புள்ளியும் பெறாமல் மைனஸ் -3.800 என்ற மோசமான ரன் ரேட் பெற்றுள்ளது. இதேபோல் ஜிம்பாப்வேயும் மைனஸ் -5.350 என்ற படுமோசமான ரன் ரேட் பெற்றுள்ளது.

44
இந்தியாவுக்கு நெருக்கடி

வெஸ்ட் இண்டீஸ் பெற்ற இமாலய ரன் ரேட் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றால் இந்தியா எளிதில் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். 

அதே வேளையில் இந்திய அணி மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா தலா 4 புள்ளிகள் பெறுவார்கள். அப்போது வெஸ்ட் இண்டீஸின் இமாலய ரன் ரேட் இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories