விளையாட்டு வீரர்கள் ஏன் அதிகமா வாழைப்பழம் சாப்பிடுறாங்க தெரியுமா? வாழையில அப்ப்டி என்ன இருக்கு?

First Published | Sep 26, 2024, 6:20 PM IST

விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் மைதானத்தில் தங்களுக்கு பசி எடுத்தால் அவர்கள் கேட்கும் பிரதான உணவாக வாழைப்பழம் உள்ள நிலையில், வாழையில் உள்ள பலன்கள் குறித்து பார்ப்போம்.

Dhoni and Sachin

விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் மைதானங்களில் தங்களுக்கு பசி எடுத்தாலோ கலைப்பு தெரியாமல் இருக்கவும் மைதானத்திலேயே உண்ணும் உணவாக வாழைப்பழம் உள்ளது. ஒரு வாழைப்பழம் சராசரியாக சுமார் 100 கிராம் எடையில் இருக்கும் பட்சத்தில் அதில் 12 கிராம் புரதமும், 400 மி.கி. நார் சத்து, 88 மி.கி. பொட்டாசியம், 7 மி.கி வைட்டமின் சி, 38 மி.கி. பாஸ்பரஸ் சத்தும் உள்ளன.

வாழைப்பழகத்தில் வைட்டமின் டி சத்தும், தாதுச்சத்தும் அதிகமாக உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள இரும்பு சத்தும், பொட்டாசியமும் உடனடியாக உடலில் சேரக் கூடியது. மேலும் நன்கு கணிந்த வாழைப் பழத்தை சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள் சுமார் 35 சதவீதம் அதிகரிப்பதால் உடலும், மனமும் சுறுசுறுப்பாகி விடுகிறது.

Tap to resize

வாழைப்பழத்தில் உள்ள புரதச்சத்தும், கால்சியமும் உடலில் உள்ள நரம்புகள் தளர்வடையாமல் இருக்க உதவுகிறது. இதயம் சீராக சுருங்கி விரிவடைய தேவையான மக்னீசியம், பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைட்ரோ அமிலம், சோடியம் உப்பு, ரத்தத்தை உறையச்செய்யாமல் இருக்க உதவும் பொட்டாசியம் உள்ளிட்டவை வாழைப் பழத்தில் உள்ளன.

தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உடலில் பொட்டாசியம் அளவு குறையாமல் இருந்தால் நமது உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். காலை உணவுடன் தினமும் 1 வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இதனால் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால் பல மணி நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

மேலும் வாழைப்பழத்தில் உள்ள நொதிகள் குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். இதனால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. நாம் சாப்பிடும் ஒரு வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை அறிந்து கொண்ட வல்லுநர்கள் விளையாட்டு வீரர்களுக்கு பரிந்துரைக்கும் பிரதான உணவாக வாழைப்பழம் உள்ளது.

Latest Videos

click me!