6 சிக்ஸர், 86 பவுண்டரி, 498 ரன்கள் குவித்த துரோணா தேசாய் – சச்சின், பிரித்வி ஷா வரிசையில் இடம் பிடித்த மாணவன்!

First Published | Sep 25, 2024, 10:29 PM IST

Drona Desai: குஜராத் பள்ளி மாணவர் துரோணா தேசாய், பள்ளி போட்டியில் 498 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். 7 வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாடி வரும் இவர், தனது திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Drona Desai

பள்ளி விளையாட்டில் கிட்டத்தட்ட 500 ரன்கள் எடுத்த குஜராத் வீரர் துரோணா தேசாய் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், அவர் யார்? என்று இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம் வாங்க….

கிரிக்கெட்டிற்கு இருக்கும் ஆர்வம் மற்ற விளையாட்டுகளுக்கு இருப்பதில்லை. மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டிற்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் பள்ளிகளிலிருந்து தொடங்குகிறது. அதற்கு உதாரணமே, இந்திய ஜாம்பவான் கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்லப்படும் சச்சின் டெண்டுல்கர் தான்.

Drona Desai, Gujarat School

சச்சின் டெண்டுல்கர் முதல் பிருத்வி ஷா வரையில் பலரும் பள்ளி கிரிக்கெட் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இதில், சச்சின் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால், பிருத்வி ஷா வாய்ப்பிற்காக போராடி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் முதல் பிருஷ்வி ஷா வரையில் பள்ளி கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர்களின் பட்டியலில் தற்போது மற்றொரு பேட்ஸ்மேனும் இணைந்திருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை, குஜராத் பள்ளி மாணவன் துரோணா தேசாய். பள்ளி கிரிக்கெட் போட்டியில் மேஜிக் செய்த துரோணா தேசாய் 320 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 86 பவுண்டரிகள் உள்பட 498 ரன்கள் குவித்தார். காந்திநகரில் உள்ள ஷிவாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான திவான் பல்லுபாய் டிராபி தொடரில் பல நாள் போட்டியில் செயின்ட் சேவியர்ஸ் (லயோலா) அணிக்காக விளையாடும் போது இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

Latest Videos


Sachin Tendulkar, Drona Desai

ஜே.எல் ஆங்கிலப் பள்ளிக்கு எதிராக அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 712 ரன்கள் வித்தியாசத்தில் தனது அணியின் ஆதிக்க வெற்றியை உறுதி செய்தார்.

யார் இந்த தேசாய்?

குஜராத்தைச் சேர்ந்த துரோணா தேசாய், 7 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். துரோணா ஜூனியர் அளவில் தொடங்கி தனது அற்புதமான பேட்டிங்கால் தரவரிசையில் உயர்ந்துள்ளார். ஏற்கனவே குஜராத் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடிய துரோணா, தற்போது 19 வயதுக்குட்பட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை 19 வயதுக்குட்பட்ட குஜராத் மாநில அணியில் சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் துரோணாவை பார்க்கலாம்…

Diwan Ballubhai Cup under-19

கடந்த 1966 முதல் 1976 வரை 10 ஆண்டுகள் ரஞ்சி டிராபியில் விளையாடிய ஜெய பிரகாஷ் ஆர். படேலிடம் இருந்து தேசாய் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் ஒரு கிரிக்கெட் வீரராக ஆவதற்கு எனக்கு வாய்ப்பு இருப்பதாக என் தந்தை நம்பினார். அவர் என்னை ஜேபி சாரிடம் (ஜெய்பிரகாஷ் படேல்) அறிமுகப்படுத்தினார், அன்றிலிருந்து, கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, நான் தேர்வு எழுத மட்டுமே பள்ளிக்குச் சென்றேன். முழுக்க முழுக்க கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினேன்,” என்று தேசாய் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Drona Desai, Diwan Ballubhai Cup under-19

பிரித்வி ஷா முதல் தேசாய் வரை: இளம் பள்ளி கிரிக்கெட் வீரர்கள் எடுத்த ரன்கள்:

பிரனவ் தணவாடே – 1009* ரன்கள் – கேசி காந்தி உயர்நிலைப் பள்ளி

பிரித்வி ஷா – 546 ரன்கள் – ரிஸ்வி ஸ்ப்ரிங்பீல்டு உயர்நிலைப் பள்ளி

டாக்டர் ஹவெல்லா – 515 ரன்கள் – பி. பி அண்ட் சி.ஐ. ரயில்வேஸ்

சமன்லால்- 506* ரன்கள் – மோஹிந்திரா கல்லூரி

அர்மன் ஜாஃபர் – 498 ரன்கள் - ரிஸ்வி ஸ்ப்ரிங்பீல்டு உயர்நிலைப் பள்ளி

துரோணா தேசாய் – 498 ரன்கள் – செயிண்ட் சேவியர்ஸ் (லயோலா)

click me!