IPL 2025:ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங்கிற்கு ஆப்பு வைக்க பார்க்கும் கேகேஆர்? யாரையெல்லாம் தக்க வைத்துக் கொள்ளும்?

Published : Sep 25, 2024, 09:35 PM IST

IPL 2025, KKR Retained Players: ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக, அணிகள் தங்கள் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்ற கேகேஆர் அணி, ஷ்ரேயாஸ் ஐயர், சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14
IPL 2025:ஷ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங்கிற்கு ஆப்பு வைக்க பார்க்கும் கேகேஆர்? யாரையெல்லாம் தக்க வைத்துக் கொள்ளும்?
KKR - IPL 2025

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்து கொள்ளும், யாரையெல்லாம் விடுவிக்கும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. மேலும், ஒரு சில அணிகளில் கேப்டன்சியும் மாற்றும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, இதுவரையில் ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் விடுவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக புதிய கேப்டனை தேடும் பணியில் ஆர்சிபி தீவிரமாக இறங்கியுள்ளது.

24
Shreyas Iyer, IPL 2025

ஆர்சிபிக்கான புதிய கேப்டன் பட்டியலில் ரோகித் சர்மாவின் பெயர் அடிபடுகிறது. அதற்கு மும்பை இந்தியன்ஸ் அவரை விடுவித்தால் மட்டுமே ஆர்சிபியால் ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுக்க முடியும். இப்படியெல்லாம் இருக்க, 2024 ஆம் ஆண்டு 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

 

ஷ்ரேயாஸ் ஐயர்:

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கேகேஆரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஷ்ரேயாஸ் ஐயர். 14 இன்னிங்ஸ் விளையாடி 351 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதில், 2 அரைசதமும் அடங்கும். டீம் ஜெயிச்சதால் கேப்டன்சியில் நல்ல பேரும் கிடைத்துவிட்டது. ஆதலால், ஷ்ரேயாஸ் தக்க வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

34
Kolkata Knight Riders Retention

சுனில் நரைன்:

கடைசி சீசனுக்கு முன்னதாக சுனில் நரைன் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தக்க வைக்கப்பட்டார். கடந்த சீசனில் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் நரைன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.  ஓப்பனிங் பேட்ஸ்மேனா இறங்கி 488 ரன்ஸ் எடுத்தாரு. பவுலிங்லயும் 17 விக்கெட். அதனால நரேனையும் கண்டிப்பா தக்க வைப்பார்கள் என்று தெரிகிறது.

பிலிப் சால்ட்:

கடைசி சீசனில் தான் கேகேஆர் அணிக்கு வந்தார். தொடக்க வீரராக சக்க போடு போட்டார். 12 இன்னிங்ஸ்ல 435 ரன்ஸ் எடுத்தாரு. விக்கெட் கீப்பிங்கும் நல்லாப் பண்ணாரு. அதனால சால்ட்டையும் தக்க வச்சுக்க வாய்ப்பு இருக்கு.

44
KKR Retention - IPL 2025

ரிங்கு சிங்:

யுவராஜ் சிங்கிற்கு பிறகு அதிரடி, சிக்ஸருக்கு பெயர் போன ரிங்கு சிங்குவை கேகேஆர் கண்டிப்பாக தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங்கிற்கு கடைசி சீசனில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் 11 இன்னிங்ஸ்ல 168 ரன்கள் எடுத்தார். எனினும், அவரும் தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

ஆண்ட்ரே ரஸல்:

இவரைப் பற்றி சொல்லவே வேணாம். கேகேஆர் அணியில் நீண்ட நாட்களாக இருக்கிறார். இன்னும் அவரால் நன்றாக விளையாட முடியும் என்று கடந்த சீசனில் நிரூபித்துவிட்டார். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கிய ரஸல் 9 இன்னிங்ஸ் விளையாடி 222 ரன்கள் எடுத்ததோடு, 19 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். ஆதலால் அவரும் தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories