
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பேப்டனும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான எம் எஸ் தோனி தனது மூத்த சகோதரரான நரேந்திர சிங் தோனியை ஏன் தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் காட்டவில்லை? தனது வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்க முடிவு செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இது உண்மை தானா? அப்படி என்றால் ஏன் அவ்வாறு செய்தார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க…
கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய இந்திய ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அணிக்கு முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவின் வாழ்க்கை வரலாற்று படம் வெளியானது. அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படங்கள் திரைக்கு வந்தன.
இதில், தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் தனது அப்பா, அம்மா, சகோதரி, நண்பர்கள், காதலி என்று எல்லாவற்றையும் காண்பித்த தோனி தனது மூத்த சகோதர் நரேந்திர சிங் தோனியை காட்டவில்லை. வேண்டுமென்றே தோனி அவ்வாறு செய்ததாக ரசிகர்கள் நம்பி வருகின்றனர். தோனி வேண்டுமென்றே அப்படி செய்தாரா? இல்லையா என்பது பற்றி பார்க்கலாம் வாங்க…
எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு, ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் 2016ல் திரைக்கு வந்தது. இந்த படத்தை இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கியிருந்தார். தோனியின் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சுஷாந்தின் நடிப்பில் தோனி மிகவும் ஈர்க்கப்பட்டார்.
ஏனென்றால் அச்சு அசல் தோனியைப் போன்று இருந்தார். ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன காரணம் என்று கேட்டால், அதற்கு முக்கிய காரணம் தோனியின் மூத்த சகோதர் நரேந்திர சிங் தோனி.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதில், நரேந்திர சிங் தோனியின் பல்வேறு விதமான ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த பக்கத்தில் தோனியின் குடும்பத்தைவிட்டு நரேந்திர சிங் தோனி தனிப்பட்ட வாழ்க்கையில் வாழ்ந்து வருவது தெரிகிறது. ஆனால், அவர் எங்கு இருக்கிறார்? என்பது குறித்த விவரங்கள் இல்லை என்றாலும், நரேந்திர சிங்கின் இன்ஸ்டா பக்கத்தில் கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஏன் நரேந்திர சிங் தோனி காட்டப்படவில்லை?
கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி புகழின் உச்சத்திற்கு சென்ற பிறகு நரேந்திர சிங் தோனி ஒரு போதும் தோனியின் வாழ்க்கையில் காணப்படவில்லை. தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நரேந்திரன் என்ற பெயர் கூட இடம் பெறவில்லை. ஆனால், தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா இடம் பெற்றிருந்தார். தோனியின் அப்பா பான் சிங் தோனி மற்றும் அம்மா பிரியங்கா ஜா, பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
தனது குடும்பத்தை காட்ட ஆர்வம் கொண்ட தோனி தன்னை விட 10 வயது மூத்த சகோதரரான நரேந்திரன் சிங் தோனியை காண்பிக்க விரும்பவில்லை. ஏன் தோனி அவ்வாறு செய்தார் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ஆனால், இதற்கான பதில் இல்லை. ஏனென்றால் திரைக்கு பின்னால் என்ன நடந்தது என்பது குறித்து சம்பந்தப்பட்ட இயக்குநர், நடிகர், நடிகைகள், தோனிக்கு மட்டுமே தெரிந்த ஒன்று தான். ஆதலால் மற்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. ஆனால், படம் வெளியான போது நரேந்திர சிங் தோனி அளித்த பேட்டியில் அது தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் அல்ல. ஆதலால் நான் படத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் இருந்திருக்கலாம்.
தோனியின் குழந்தைப் பருவம் முதல் இளைஞராக அவர் போராடிய போதிலும் சரி, கிரிக்கெட்டில் சாதித்து காட்டிய போதிலும் சரி எனது பங்களிப்பு எதுவும் இல்லை. இதன் காரணமாக படத்தில் நான் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
எம்.எஸ்.தோனியை விட 10 வயது மூத்தவர். தோனியின் ஆர்மப கால கிரிக்கெட் வாழ்க்கையின் போது நரேந்திரன் ராஞ்சியில் இல்லை. அப்போது ஜேவிஎம் ஷியாமலிக்கு வெளியில் இருந்தேன். 1991 ஆம் ஆண்டு முதல் நான் வீட்டிலேயே இல்லை. அல்மோராவில் இருந்தேன். ராஞ்சிக்கு செல்வதற்கு முன் நான் உயர் படிப்பை முடித்தேன். இது போன்ற காரணங்களால் என்னை படத்தில் காட்டுவது என்பது கடினமாக இருந்திருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.