Rohit Sharma:கோலியின் வெற்றிப் பாதையில் டிராவல் பண்ணும் ரோகித் சர்மா – கேப்டனான பிறகு ஹிட்மேன் அசுர வளர்ச்சி!

First Published | Sep 9, 2024, 2:01 PM IST

Virat Kohli and Rohit Sharma Captaincy Records: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலியைப் போலவே கேப்டன்சியில் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். கேப்டன் பதவிக்கு முன்னும் பின்னும் அவர்களின் புள்ளி விவரங்கள் இதை உறுதி செய்கின்றன.

Rohit Sharma - Virat Kohli

கிரிக்கெட் மட்டுமின்றி எந்த விளையாட்டாக எடுத்துக் கொண்டாலும் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வீரர் அணியை சிறப்பாக வழிநடத்துவது மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் சிறந்த வீரராக இருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் அணியின் வெற்றிக்கு தனித்து நின்று தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் கேப்டனான இருக்கும் ரோகித் சர்மாவும் அதைத் தான் செய்து வருகிறார்.

Rohit Sharma, Virat Kohli

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்து டிராபியை கோட்டைவிட்டது. ஆனால், பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று கொடுத்து புதிய சாதனை படைத்தது.

ஒரு கேப்டனாக ரோகித் சர்மா தற்போது விராட் கோலியின் வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். எப்படி என்று பார்க்கலாம் வாங்க….

Latest Videos


Rohit Sharma Captaincy Records

ஒரு சாதாரண வீரர்:

கிரிக்கெட் உலகின் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பவர் ஹிட்மேன் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை இரட்டை சதம் அடித்தது மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் ஹிட்மேன் படைத்தார்.

இதன் மூலமாக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை படைத்துள்ளார். இவர் மட்டும் களத்தில் நின்றுவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது என்பது எளிதானல்ல. மும்பைக்காரரான ரோகித் சர்மா மட்டும் கடல் அலைகள் போன்று சீற்றம் அடைந்தால் எதிரணிக்கு தான் ஆபத்து. மைதானத்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி மழை பெய்யும். கடந்த ஒரு வருடமாக நல்ல ஃபார்மில் இருந்து வரும் ஹிட்மேன், இந்திய அணிக்காக அபாரமாக விளையாடி வருகிறார்.

Virat Kohli Captaincy Records

அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோகித் அபாரமான பேட்டிங்கால் பந்து வீச்சாளர்களை திணறடித்தார். பவர் பிளேயில் அச்சமின்றி விளையாடி அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். இந்தத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய ரோகித், 54.27 சராசரியும் 125.94 ஸ்ட்ரைக் ரேட்டும் என 597 ரன்கள் குவித்தார்.

இதில் 1 சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் உலகக் கோப்பை மட்டுமல்ல, டி20 உலகக் கோப்பையிலும் ரோகித் அசத்தினார். 8 போட்டிகளில் 156.70 ஸ்ட்ரைக் ரேட்டில் 3 அரைசதங்களுடன் 257 ரன்கள் குவித்தார். 

Rohit Sharma and Virat Kohli

கேப்டன்சி கிடைத்த பிறகு ரோகித்தின் அசுர வளர்ச்சி!

இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கு முன்பு ரோகித் அமைதியாக இருந்தார். ஆனால், முழுநேர கேப்டன்சி கிடைத்த பிறகு அதிரடியாகிவிட்டார். அதற்கு இந்த புள்ளிவிவரங்களே சாட்சி. கேப்டன் ஆவதற்கு முன்பு ரோகித், 210 போட்டிகளில் விளையாடி, 47.85 சராசரியும் 88.42 ஸ்ட்ரைக் ரேட்டும் என 8662 ரன்கள் எடுத்தார். ஆனால், கேப்டனாக 46 இன்னிங்ஸ்களில் இருந்து 55.61 சராசரியும் 111.86 ஸ்ட்ரைக் ரேட்டும் என 2169 ரன்கள் குவித்துள்ளார். 

Virat Kohli-Rohit Sharma

கேப்டனாக விராட் கோலியின் அசாத்திய ஆட்டம்:

ஆம், கேப்டனாக ரோகித் விராட் கோலியின் பாதையிலேயே செல்கிறார். கோலி கேப்டன் ஆன பிறகு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பல போட்டிகளில் தனி ஒருவராக நின்று அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். 

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டன் ஆவதற்கு முன்பு 190 போட்டிகளில் விளையாடி இருந்தார். 51.99 சராசரியில் 8423 ரன்கள் எடுத்தார். ஆனால், கேப்டன் பதவி கிடைத்த பிறகு கோலி 91 போட்டிகளில் இருந்து 72.65 சராசரியில் 5,449 ரன்கள் குவித்தார்.

ஒட்டுமொத்தமாக, இந்த இரண்டு தற்போதைய மற்றும் முன்னாள் கேப்டன்களும் கேப்டன்களாக அணியை வழிநடத்துவது மட்டுமல்லாமல், வீரர்களாகவும் அசத்தியுள்ளனர். இதன் மூலம் தங்கள் தலைமைத்துவ திறமையை நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!