இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக சென்னைவாசிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடர் முதல் முறையாக இந்தியாவிற்கு வரவுள்ளது. 2026-27 சீசனின் தொடக்க ஆட்டம், வரும் டிசம்பர் 12 அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸும் இணைந்து வெளியிட்டிருப்பது இதன் முக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது.
முதல் போட்டி யாருக்கு? எப்போது?
இந்த முதல் போட்டியில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் (Melbourne Renegades) மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (Perth Scorchers) ஆகிய பலம் வாய்ந்த அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடருக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள டி20 லீக் தொடர்கள் மீது இந்திய ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், BBL போட்டி நேரடியாக சென்னையில் நடப்பது பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.