IPL 2024, Delhi Capitals Squad: ஐபிஎல் 2024ல் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் யார்?

Published : Dec 11, 2023, 12:51 PM IST

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் ரிஷப் பண்ட் இடம் பெற்றிருந்தார்.

PREV
17
IPL 2024, Delhi Capitals Squad: ஐபிஎல் 2024ல் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் யார்?
IPL 2024 - Delhi Capitals

ஒவ்வொரு ஆண்டும் பிசிசியின் மூலமாக நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் ரிஷப் பண்ட்டும் ஒருவராக இருந்தார்.

27
David Warner Delhi Capitals

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறாவிட்டாலும், சமீபத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக சால்ட் லேக் வளாக ஆடுகளத்தில் ஒரு பயிற்சி முகாமின் போது தனது DC அணி வீரர்களுடன் சேர்ந்தார். ரிஷப் பண்ட் அணிக்கு திரும்புவதை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி கூறியிருந்தார்.

37
Delhi Capitals Retained Players

ரிஷப் பண்ட் தற்போது நன்றாக இருக்கிறார். வரும் சீசனில் அவர் விளையாடுவார் என்று கூறியிருந்தார். ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்தில் காயமடைந்து கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

47
Rishabh Pant - Delhi Capitals

கார் விபத்து காரணமாக நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் பண்ட் ஒரு பார்வையாளராக வந்து போட்டி கண்டு ரசித்தார். ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வகையில், தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

57
Delhi Capitals

டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக அணியை வழிநடத்தினார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பும் நிலையில் டெல்லி அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் பண்ட் கேப்டனாகவே செயல்படுவாரா அல்லது டேவிட் வார்னர் தான் கேப்டனாக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஐபிஎல் 2024 தொடரின் போது தான் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

67
Rishabh Pant - Delhi Capitals Retained Players

டெல்லி கேபிடல்ஸ் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்

ரிஷப் பண்ட், பிரவீன் துபே, டேவிட் வார்னர், விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, அபிஷேக் போரெல், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், லுங்கி நிகிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார்

77
Delhi Capitals Released Players

டெல்லி கேபிடல்ஸ் விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ரிலீ ரோஸோவ், ரோவ்மன் பவல், மணீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், பில் சால்ட், முஷ்டாபிஜூர் ரஹ்மான், கம்லேஷ் நாகர்கோட்டி, பிபால் படேல், பிரியம் கர்க், அமன் கான், சேதன் சகாரியா

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories