MS Dhoni: ஒன்மேன் ஆர்மி தோனிக்காக கொண்டு வரப்பட்ட ஐபிஎல் விதி என்ன? பிசிசிஐயின் 8 விதிகளின் முழு பட்டியல்!

First Published Sep 29, 2024, 12:19 PM IST

IPL 2025 Rules, IPL 2025 Mega Auctions: ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நெருங்கி வருவதால், பிசிசிஐ புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, வீரர்களைத் தக்கவைத்தல், ஏலத்திற்கான தொகை, போட்டி சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

IPL 8 Rules, IPL 2025 Retentions, Dhoni Uncapped and Local Player

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் இன்னும் 2 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலம் வெளிநாட்டில் தான் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்றது. இந்த முறை ஐக்கிய அரபு நாட்டில் நாட்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையாக அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL Mega Auction 2025

இந்த நிலையில் தான் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி இருந்தது. இதற்கு பிசிசிஐ பதில் அளித்துள்ளது. அதாவது, பிசிசிஐ 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இது குறித்து ஐபிஎல் வெளியிட்ட விதிமுறைகள் பற்றி பார்க்கலாம் வாங்க…

IPL Rules 1:

ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஏலத்திற்கு முன்னதாக கூட 6 வீரர்களை தக்க வைக்கலாம். அப்படியில்லை என்றால், ஏலத்தின் போது ரைட் டூ மேட்ச் (ஆர்டிஎம்) கார்டு மூலமாக வாங்க விரும்பிய 6 வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.

Latest Videos


IPL 2025 Mega Auctions

IPL Rules 2:

எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், எத்தனை வீரர்களை ஆர்டிஎம் கார்டு மூலமாக ஏலத்தில் எடுக்கலாம் என்பது குறித்து அந்தந்த அணியே முடிவு செய்து கொள்ளலாம். தக்க வைக்கப்படும் வீரர்கள் அல்லது ஆர்டிஎம் கார்டு மூலமாக வாங்கப்படும் 6 வீரர்களில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் இடம் பெறலாம். அதிகபட்சமாக 2 உள்ளூர் வீரர்களும் இடம் பெறலாம்.

IPL Rules 3:

ஒவ்வொரு அணியும் ரூ.120 கோடி வரையில் ஏலத்திற்கு செலவு செய்யலாம். இது கடந்த ஆண்டு ஏலத்தில் ரூ.100 கோடியாக இருந்தது. தற்போது 20 கோடி அதிகரித்து ரூ.120 கோடியாக உள்ளது.

IPL Rules 4:

17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஐபிஎல் வீரர்களுக்கு போட்டி சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் மூலமாக ஒவ்வொரு அணியும் கூடுதலாக ரூ.12.60 கோடி செலவு செய்ய அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கு ரூ.7.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். ஒரு வீரர் அனைத்து லீக் போட்டியிலும் விளையாடினால் அவருக்கு மொத்தமாக ரூ.1.05 கோடி கிடைக்கும். ஒப்பந்தத்தின் போது எடுக்கப்படும் வீரர்களின் சம்பளத்தோடு கூடுதலாக போட்டி சம்பளமும் கிடைக்கும்.

Indian Premier League - IPL Rules and Regulations

IPL Rules 5:

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்து நடைபெற இருக்கும் 2 ஐபிஎல் தொடர்களில் மினி ஏலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் மட்டுமே மினி ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்ய முடியும். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும். ஆதலால், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் பங்கேற்க முடியாது.

IPL 2025 Mega Auctions

IPL Rules 6:

இதே போன்று தான் ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீரர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தொடரிலிருந்து விலகினால், அவர்களாலும் அடுத்த 2 ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாது. அவர்களுக்கு 2 ஐபிஎல் சீசன்களில் விளையாட தடை விதிக்கப்படும்.

IPL Rules 7:

இந்திய அணியைச் சேர்ந்த ஒருவர் ஓய்வு பெற்றவரோ, ஓய்வு பெறாதவரோ 5 ஆண்டுகளுக்கு எந்தவித சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20) இடம் பெறவில்லை என்றாலும் சரி, பிசிசிஐ ஒப்பந்தம் பெறவில்லை என்றாலும் சரி, அவர் உள்ளூர் வீரராக கருதப்படுவார். உதாரணத்திற்கு தோனி 2019 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இதுவரையில் அவர் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடவில்லை. அப்படியென்றால் தோனி உள்ளூர் வீரராக கருதப்படுவார். இந்த விதி தோனிக்காகவே கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

IPL Rules 8:

வரும் 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரையில் இம்பேக்ட் விதி பொருந்தும். இதில் எந்த வீரருக்கும் உடன்பாடில்லை என்றாலும் கூட பிசிசிஐ இந்த விதியில் உறுதியாக இருக்கிறது.

click me!