இது விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட், முகமது சிராஜ், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு இது பொருந்தும். இவர்கள் தான் எல்லா லீக் போட்டிகளிலும் விளையாடுகின்றனர்.
மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்: ஐபிஎல் கூட்டம் தாமதம்!
சனிக்கிழமை காலை பெங்களூருவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், நகரில் உள்ள மற்றொரு பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக தகவல் பரவியதை அடுத்து, ஐபிஎல் நிர்வாகக் குழு தனது கூட்டத்தை மாலைக்கு ஒத்திவைத்தது. போலீசார் சோதனை நடத்திய பின்னர், அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்று தெரியவந்தது. சனிக்கிழமை மாலை ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.