ரோகித் சர்மாவை எப்படி கட்டிப்பிடிக்கலாம்? வாசிம் அக்ரமை வச்சு செய்யும் பாகிஸ்தானியர்கள்!

Published : Feb 16, 2026, 07:01 PM IST

டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரமுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

PREV
14
பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவரில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணியில் இஷான் கிஷன் 40 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 77 ரன்கள் அடித்து அசத்தினார்.

24
ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த வாசிம் அக்ரம்

மேலும் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு நமது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரரும், டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் அம்பாசிடருமான ரோகித் சர்மா, பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆகியோர் டி20 உலகக்கோப்பையை கையில் எடுத்து வந்தனர்.

அப்போது ரோகித் சர்மாவும், வாசிம் அக்ரமும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி அன்பினை பரிமாறிக் கொண்டனர். இருவரும் புன்னகைத்தபடியே ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

34
வாசிம் அக்ரமை விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்

வாசிம் அக்ரம் இந்திய வீரர் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்ததற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் அந்த அணி வீரர்களும் கைகுலுக்குவதை இந்திய வீரர்கள் தவிர்த்து வருகின்றனர். 

நேற்றைய போட்டியிலும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியினரிடமும் கைகுலுக்கவில்லை. இப்படி இருக்கும்போது, வாசிம் அக்ரம் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்தது ஏன்? என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் முகமது அமீர் மற்றும் அகமது ஷெஷாத் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

44
இந்திய வீரர் மீது பாசம் காட்டக்கூடாது

இது தொடர்பாக கிண்டலாக பேசிய அகமது ஷெஷாத், ''"பதற்றம் அதிகமாக இருக்கும்போதும் வாசிம் அக்ரம் எப்படி விளையாட்டுத் திறனைக் காட்டுவது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார். அவர் எங்கு தேவையோ அங்கெல்லாம் கைகுலுக்குகிறார். அவர் தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளார்'' என்றார். 

இதேபோல் பாகிஸ்தான் முழுவதிலும் இருந்தும் ''இந்தியா நம்மை புறக்கணிக்கும்போது நீங்கள் ஏன் அந்த நாட்டு வீரர் மீது பாசம் காட்டுகிறீகள்'' என வாசிம் அக்ரமுக்கு எதிராக எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories