அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!

Published : Feb 15, 2026, 11:43 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி பெற்றாலும், அபிஷேக் சர்மாவின் மோசமான பார்ம் தொடர்கிறது. அவரது பலவீனத்தை அறிந்து எதிரணியினர் விரைவில் அவரை அவுட்டாக்கி விடுகின்றனர்.

PREV
13
இந்திய அணி மாபெரும் வெற்றி

டி20 உலக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷனின் அதிரடி அரை சதம், பும்ரா, ஹர்திக், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சரின் சூப்பர் பவுலிங்கால் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற்றாலும் அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா சோபிக்காதது ரசிகர்களிடம் விரக்தியை ஏற்படுத்தியது.

அபிஷேக் சர்மா மீண்டும் டக் அவுட்

இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அபிஷேக் சர்மா ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சல்மான் அலி ஆகா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஷஹீன் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகியிருந்தார். இதன்மூலம், அறிமுக டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆன முதல் தொடக்க வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

23
அபிஷேக் சர்மாவின் பலவீனம்

இதற்கு முன்பு இந்தியாவின் ஆஷிஷ் நெஹ்ரா, வங்கதேசத்தின் இம்ருல் கயீஸ் ஆகியோர் தங்களது முதல் டி20 உலகக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளனர். இந்த இரு வீரர்களும் டி20 உலகக் கோப்பையில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அபிஷேக் சர்மாவின் பலமே அவரது அதிரடி பேட்டிங் தான். முதல் பந்தில் இருந்தே சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி எதிரணி பவுலர்களை நெருக்கடிக்குள் தள்ளுவது தான் அவரது பாணி. ஆனால் இப்போது அவரது அதிரடியே அவருக்கு பலவீனமாக அமைந்துள்ளது.

அவசர கதியில் அவுட்

ஆம்.. டி20 உலககோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அபிஷேக் சர்மா கொஞ்சம் பொறுமையாக விளையாடிய தேவை உள்ளது. அமெரிக்காவுக்கு எதிராகவும் பந்தை சிக்சருக்கு விளாச ஆசைப்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சல்மான் ஆகா ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் பவுலிங் போட்ட நிலையில், கொஞ்சம் கூட பொறுமையின்றி அவரச ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் அபிஷேக் சர்மா.

33
இஷான் கிஷன் பாணியை அபிஷேக் பின்பற்ற வேண்டும்

இவர் எப்படியும் மட்டையை சுழற்ற தான் போகிறார் என அறிந்து கொண்ட எதிரணிகள் சரியான பீல்டிங் செட்டப் செய்து அபிஷேக் சர்மாவை விரைவில் அவுட்டாக்கி விடுகின்றன. கடினமான பிட்ச்சில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்கு இஷான் கிஷனின் இன்றைய பேட்டிங் பெரும் உதாரணம். 

ஆகவே அபிஷேக் சர்மாவும் பிட்ச்சின் நிலை அறிந்து, எதிரணி பவுலர்களின் நிலை அறிந்து சிறிது ஓவர்கள் பொறுமை காத்தால் இந்திய அணிக்கு நல்லது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories